குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி.. வாக்கு சதவீதத்தில் சரிவு... டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு
குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்கிறது டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு.
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் அதேநேரத்தில் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவின் வாக்கு சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என்கிறது டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர். கருத்து கணிப்பு முடிவுகள்.
குஜராத்தில் நவம்பர் 23-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 684 வாக்குச் சாவடிகளில் 6,000 பேரிடம் டைம்ஸ் நவ்- வி.எம்.எம்.ஆர் நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பை நடத்தியது. இக்கருத்து கணிப்பில் ஹர்திக் படேல், ஜிஎஸ்டி உள்ளிட்ட 10 விவகாரங்களை முன்வைத்து மக்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

வாக்கு சதவீதம் குறைவு
இக்கருத்து கணிப்புகளில் பாஜக 22 ஆண்டுகால ஆட்சியைத் தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்தும் இருக்கிறது.

காங்கிரஸுக்கு 68
பாஜகவுக்கு இத்தேர்தலில் 111 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கும் 68 தொகுதிகளும் கிடைக்கும் என்கிறது டைம்ஸ் நவ். இதர கட்சியினருக்கு 3 தொகுதிகள் கிடைக்குமாம். 2012 தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவின் வாக்கு சதவீதமானது 48%-ல் இருந்து 45% ஆக குறைந்துள்ளது. ஆனால் காங்கிரஸுக்கோ 39%-ல் இருந்து 40% ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் பாஜக 115
2012 சட்டசபை தேர்தலில் பாஜக 115 இடங்களையும் காங்கிரஸ் 61 இடங்களையும் கைப்பற்றியது. இதர கட்சிகள் 6 இடங்களைக் கைப்பற்றியிருந்தன.

பாஜகவுக்கு குறைவு
இத்தேர்தலில் பாஜகவுக்கு 45% வாக்குகள் கிடைக்கும்; காங்கிரஸுக்கு 40%; இதர கட்சிகளுக்கு 15% கிடைக்கும் என்கிறது டைம்ஸ் நவ் முடிவுகள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications