அய்யய்யோ வேட்பாளராக அறிவிக்காதீங்க..போட்டியிடவே மாட்டேன்.. குஜராத் மாஜி துணை முதல்வர் செம்ம "அடம்"!
அகமதாபாத்: குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் பட்டேல் தம்மை மேஹ்சனா தொகுதி வேட்பாளராக அறிவிப்பதற்கான பரிசீலனை நடைபெறுகிறது. என்னை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னரே நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதை தெரிவித்துவிடுகிறேன் என கூறியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. 34 மத்திய அமைச்சர்களை உள்ளடக்கிய 195 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. பாஜகவின் இந்த வேட்பாளர்கள் பட்டியல் வேகம் குறித்து சிலாகித்து பேசப்பட்டு வருகிறது.

ஆனால் பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியான அடுத்த நாளே பேரிடியாக அக்கட்சிக்கு செய்திகள் சென்று கொண்டிருக்கின்றன. மேற்கு வங்க மாநிலம் அன்சோல் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி நடிகர் பவன் சிங், தாம் தேர்தலில் போட்டியிட முடியாது என அறிவித்துவிட்டார். மேற்கு வங்க பெண்களை இழிவாக பேசிய சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததால் தேர்தலில் போட்டியிட அஞ்சி பவன் சிங் விலகிவிட்டார்.
மாஜி கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் இருவருமே தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து அதிர்ச்சி குரல் வெளிப்பட்டிருக்கிறது. குஜராத்தில் பாஜக நேற்று 15 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இதில் மேஹ்சனா தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
பாஜக அடுத்து வெளியிடும் பட்டியலில் குஜராத்தின் மேஹ்சானா லோக்சபா தொகுதி வேட்பாளராக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் நிதின் பட்டேல் அறிவிக்கப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் மேஹ்சானா தொகுதி வேட்பாளர் நிதின் பட்டேல் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் நிதின் பட்டேலோ தாம் மேஹ்சனா தொகுதியில் போட்டியிடவே முடியாது என கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள நிதின் பட்டேல், குஜராத்தின் 15 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாகவே நான் மேஹ்சனா தொகுதியில் போட்டியிடவில்லை என்பதை அறிவித்துவிடுகிறேன் என கூறியுள்ளார். இத்தகைய அடுத்தடுத்த தகவல்களால் பாஜக மேலிடம் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications