இந்து வேற.. பௌத்தம் வேற! புத்த மதம் மாற முன் அனுமதி தேவை! குஜராத் அரசு அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: பௌத்தம் என்பது தனி மதம் என்றும், இனி அந்த மதத்திற்கு மாறுபவர்கள் முன்கூட்டியே மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீப காலமாக குஜராத்தில் பௌத்த மதத்திற்கு குறிப்பிட்ட அளவில் மக்கள் மாறி வருகின்றன. இதற்காக விண்ணப்பிக்கும்போது, பௌத்தம், சமனம் உள்ளிட்டவை இந்து மதத்தின் ஓர் அங்கம்தான். எனவே இதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சில மாவட்ட ஆட்சியர்கள், மத மாற்றம் குறித்து மாநில அரசு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தனர்.

Gujarat government has directed that people who convert to Buddhism should take prior permission from district collectors

இதனையடுத்து தற்போது சில அறிவிப்புகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பௌத்தம், சமணம், சீக்கியம் உள்ளிட்டவை தனி மதம் என்றும், இனி அந்த மதத்திற்கு மாறுபவர்கள் முன்கூட்டியே மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இது குறித்து அம்மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், "பௌத்த மதத்திற்கு மாறுவதற்கான விண்ணப்பங்கள் விதிகளின்படி கையாளப்படவில்லை என்பது அரசின் கவனத்திற்கு வந்ததையடுத்து, ஏப்ரல் 8ம் தேதி உள்துறை அமைச்சகத்தால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது" என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தசரா உள்ளிட்ட பண்டிகை நாட்களில் தலித்துகள் குழுவாக பௌத்த மதத்திற்கு மாறுவார்கள். குஜராத் பௌத்த அகாடமி (ஜிபிஏ) எனும் அமைப்பு இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.

தற்போது பௌத்த மதம் மாறுவதற்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதை ஜிபிஏ அமைப்பு வரவேற்றிருக்கிறது. இதன் தலைவர் இது குறித்து கூறுகையில், "இந்தச் சுற்றறிக்கையில் பௌத்தம் தனி மதம் என்றும் அதற்கும் இந்து மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டத்தை சிலர் தவறாக புரிந்துக்கொண்டு அதன்படி செயல்பட்டதால், நிர்வாகத்தால் குழப்பம் ஏற்பட்டது.

பௌத்தம் இந்து மதத்தின் ஒரு பகுதி அல்ல என்றும், பௌத்த மதத்திற்கு மாறுவதற்கு, மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தோம். தற்போது எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது, அரசின் வழிகாட்டுதல்களை நாங்கள் வரவேற்கிறோம்" என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு 2,000 பேர், பௌத்த மதத்திற்கு மாறியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் தலித்துக்கள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் 30,483 பௌத்தர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அம்மாநில மக்கள் தொகையில் 0.05 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+