ஹத்ராஸ் சோகம் மறையும் முன்பு குஜராத்தில் அதிர்ச்சி.. 12 வயது சிறுமி பலாத்காரம்.. கழுத்தறுத்து கொலை
காந்திநகர்: 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை, பலாத்காரம் செய்த, அவரது உறவுக்காரர் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் குஜராத்தை உலுக்கியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுக்க அதிகரித்து வரும் நிலையில், 'பெண் குழந்தைகளை காப்போம்-பேட்டி பச்சாவ்' என்று அழைப்பு விடுக்கும் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் இப்படி ஒரு குரூரமான சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டம், தீசா டவுன் என்ற ஊரைச் சேர்ந்தவர் 12 வயதாகும் மாற்றுத்திறனாளி சிறுமி. அவர் திடீரென, கடந்த வெள்ளிக்கிழமை முதல் திடீரென மாயமாகிவிட்டார்.
இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தார் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ஊருக்கு ஒதுக்குப்புறம், சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியின் 25 வயது உறவுக்கார நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான், இறுதியாக அந்த சிறுமியை தனது பைக்கில் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெகு நாட்களாக திட்டமிட்டு, பலாத்காரம் மற்றும் கொலையை அந்த இளைஞன் செய்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தர பிரதேசத்தில், இளம் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குஜராத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications