பள்ளி குழந்தைகளுக்கு தவறாக பாடம் கற்றுக்கொடுத்து சப்பைக்கட்டு கட்டிய குஜராத் அமைச்சர்
அகமதாபாத்: குஜராத்தில் அமைச்சர் சங்கர் சவுத்ரி அரசு பள்ளிக்கு திடீர் என்று சென்று கரும்பலகையில் யானை என்ற வார்த்தையை தவறாக எழுதியுள்ளார்.
குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளவர் சங்கர் சவுத்ரி. எம்.பி.ஏ. பட்டதாரி. அரசு சார்பில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியரை சேர்க்குமாறு ஊக்குவிக்கும் திட்டம் கடந்த ஆண்டு குஜராத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சங்கர் அத்திட்டத்தின் ஒரு பகுதியாக் பனஸ்கந்தா மாவட்டம் தீஸா நகரில் உள்ள அரசு துவக்கப் பள்ளிக்கு சென்றார்.

எலிபென்ட்
பள்ளிக்கு சென்றவர் திடீர் என மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். அப்போது அவர் கரும்பலகையில் 'elephant'(யானை) என்பதை தவறாக elephent என எழுதினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

விமர்சனம்
ஒரு எம்.பி.ஏ. படித்த அமைச்சருக்கு elephant என சரியாக எழுதத் தெரியவில்லை. இது பாஜக அரசில் தான் சாத்தியம். யார் கண்டது, அவர் அடுத்த மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகலாம் என அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

கிண்டல்
மாணவர்களுக்கு தவறாக பாடம் சொல்லிக் கொடுத்த சங்கர் சவுத்ரியை மக்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள். படித்த அமைச்சரே இப்படியா என பலரும் தெரிவித்துள்ளனர்.

சோதித்தேன்
ஆளாளுக்கு விமர்சிப்பதை பார்த்த அமைச்சர் சங்கர் கூறுகையில், பள்ளி மாணவர்களுக்கு நான் தவறாக எழுதினால் தெரிகிறதா என்று சோதிக்கவே அவ்வாறு வேண்டும் என்றே எழுதினேன். மற்றபடி எனக்கு elephant என்று சரியாக எழுதத் தெரியாமல் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications