சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்தது நான்தான்.. உதார் விட்ட சூரத் இளைஞரை கைது செய்த போலீஸ்!
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நபர் ஒருவர் தான் இஸ்ரோவில் பணியாற்றியதாகவும் தான்தான் சந்திரயான் 3 லேண்டரை உருவாக்கியதாகவும் கூறிய நிலையில் அவர் கூறியது போலி என கண்டறிந்தவுடன் அவரை போலீஸார் கைது செய்யப்பட்டார்.
சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணிற்கு அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரமும் ரோவர் பிரக்யானும் தரையிறங்கியது. ரோவர் பிரக்யான் நிலவில் இறங்கியது அங்கு ஒரு வலம் வந்தது.

நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடுகளும் கால் பதிக்காத நிலையில் இந்தியா முதல் நாடாக அங்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த 14 நாட்களும் 6 சக்கரங்களை கொண்ட பிரக்யான் நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சிகளை செய்யும்.
இந்த விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானின் ஆயுட்காலம் ஒரு நிலவு நாள் ஆகும். அதாவது 14 நாட்கள். நிலவில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 5 கருவிகள் லேண்டரில் அனுப்பப்பட்டன. அது போல் ரோவரில் ஆல்பா எக்ஸ் ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் அனுப்பப்பட்டுள்ளது. இது நிலவில் ரசாயன பொருட்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யும்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லேண்டரின் சாய்வுதளத்தில் இருந்து ரோவர் அழகாக இறங்கி தான் தரையிறங்கிய பகுதியை சுற்றி வந்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது. இந்த சாதனையை இஸ்ரோவை சேர்ந்த எந்த தனிஒருவரும் சொந்தம் கொண்டாடாத நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஒருவர் தான்தான் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை வடிவமைத்ததாக கூறியிருந்தார்.
சூரத்தை சேர்ந்தவர் மிதுல் திரிவேதி. இவர் உள்ளூர் சேனல்களில் பேட்டி அளித்து வருகிறார். அதில் தான்தான் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை வடிவமைத்தேன் என்கிறார். அவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்ததாகவும் தெரிிவத்துள்ளார். அவர் பிஎச்டி பட்டம் படித்துள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும் அவர் சந்திரயான் 2 திட்டத்திலும் பணியாற்றியதால் தன்னை சந்திரயான் 3 திட்டத்திலும் பணியாற்றுமாறு இஸ்ரோ அழைத்ததாக கூறுகிறார். ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட லேண்டரில் பல மாற்றங்களை செய்ததால் மட்டுமே இன்று இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது என்கிறார். இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்போது இஸ்ரோவில் பணியாற்றியதற்கான சான்றுகளை தருமாறு கேட்டால் அவர் அதை தர முன் வரவில்லை. இந்த நிலையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஒரு பிகாம் பட்டதாரி என கண்டறியப்பட்டுள்ளது. அவர் இஸ்ரோவின் பெங்களூர் அலுவலகத்தில் சந்திரயான் 3 திட்டத்தின் வடிவமைப்பு பிரிவில் ப்ரீலான்சராக பணியாற்றினாராம். அவர் நாசாவில் பணியாற்றியதாகவும் சொல்கிறார்.
முதற்கட்ட விசாரணையின் படி அவர் இஸ்ரோ விஞ்ஞானி அல்ல என்பது தெரியவந்தது. மேலும் இஸ்ரோவின் அடுத்த திட்டமான மெர்குரி ஃபோர்ஸ் இன் ஸ்பேஸ் திட்டத்திற்கு விண்வெளி ஆராய்ச்சி உறுப்பினர் என்ற போலி கடிதத்தையும் அவர் தயாரித்து வைத்திருந்ததும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. நிலவு பயணத்துக்கு பங்களிக்காமல் இஸ்ரோ குறித்து போலியான செய்திகளை பரப்பி அதன் மூலம் இஸ்ரோவுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மிதுல் மீது ஆள்மாறாட்டம் ஏமாற்றுதல் போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றுதல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications