பாஜகவை படாத பாடுபடுத்தி பதறவைத்துவிட்டதே மோடியின் குஜராத்!
அதிகாரத்தின் உச்சாணி கொம்பில் அமர்ந்து கொண்டு ஆடிய பாஜகவை அதிரவைத்துள்ளனர் குஜராத் வாக்காளர்கள்.
Recommended Video

டெல்லி: மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிட்டதாலேயே எல்லாம் தங்கள் வசம் என நினைத்த பாஜகவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மண்ணே சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பதற்றத்தை தந்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் பலவீனமான தலைமை, தெளிவற்ற வியூகங்கள் எதுவும் இல்லாத சூழலில் மாற்றம், வளர்ச்சி என்கிற கோஷங்களுடன் 2014 லோக்சபா தேர்தலை சந்தித்தது பாஜக. மாற்றம் வரும், ஏற்றம் கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்புடன் மக்களுடன் பாஜகவுக்கு அரியாசனத்தைக் கொடுத்தனர்.
ஆட்சியில் அமர்ந்ததுதான் தாமதம்..பாஜக தனது வலதுசாரி சிந்தனையை மட்டும் கவிழ்த்துவிட்டது. மக்களுக்கான நலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் என பேசிய எதுவும் தாக்கங்களைத் தரவில்லை.

கொலை, படுகொலை
மாட்டிறைச்சி வைத்தாலே படுகொலை, விமர்சித்தாலே சுட்டுக் கொலை, தேசதுரோக சட்டம்.. எதற்கெடுத்தாலும் தேசதுரோகிகள்... என பாஜக வேகமெடுத்தது. ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு என விரக்தியில் தள்ளியது பாஜக.

மக்கள் பெருங்கோபம்
இதன் விளைவுகளால் மக்கள் கோபத்தில் துடித்தனர். இதனால் பிரதமர் மோடியின் குஜராத் மண்ணிலேயே தேர்தலை நடத்தாமல் பம்மியது பாஜக.

காங்கிரஸ் மீது பாய்ச்சல்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு களத்துக்கு போன பாஜகவும் பிரதமர் மோடியும் வளர்ச்சியைப் பற்றி பேசாமல் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் விமர்சித்தனர்; இந்துக்கள் எனும் உணர்வைத் தூண்டிவிட்டுப் பார்த்தனர்.

வெலவெலத்த பாஜக
ஆனால் பாஜகவின் இந்த விளையாட்டுகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறது குஜராத் மண். இன்றைய தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு நாளைய லோக்சபா தேர்தலில் விழப் போகும் அடி என்பதைத்தான் கூறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications