குஜராத்திகள் பொய்யர்கள்- முலாயம் பேச்சு! பாஜக, பகுஜன் கடும் கண்டனம்!!
டெல்லி / லக்னோ : குஜராத்திகள் பொய்யர் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
லக்னோவில் நேற்று நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பேசிய முலாயம்சிங் யாதவ், பிரதமர் மோடியை விமர்சிக்கும் போது பொய்யர் என்று கூறியிருந்தார்.

அத்துடன் பெண்கள் மேம்பாடு பற்றி பேசுகிற அவர் தன் மனைவியை ஏன் தனியே விட்டுவிட்டார் என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார். முலாயம்சிங்கின் இந்தப் பேச்சுக்கு பாரதிய ஜனதா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜகவின் அமித் பத்ரா கூறுகையில், ஒரு மூத்த தலைவரின் பேச்சு இப்படி இருக்காது. முலாயம் ஒரு மூத்த தலைவர்தானா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்றார். பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான ஜிவிஎல் நரசிம்ஹ ராவும் முலாயம் கருத்தை விமர்சித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் சுதீந்தர படோரியா, முலாயமின் இந்த கருத்து அவர் ஒரு குறுகிய மனப்பான்மை கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது. குஜராத்தியரோ, மராத்தியரோ, தமிழரோ எந்த ஒரு மக்களையும் இப்படியெல்லாம் விமர்சிக்கக் கூடாது என்றார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications