தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய குழு ரெடி... குலாம் நபி தலைமையில்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஒரு குழுவை அறிவித்துள்ளது கட்சி மேலிடம். கட்சியின் பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் ஆசாத் தவிர, சுபாங்கர் சர்கார், முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கோபிநாத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

Gulam Nabi Azad led team to select Cong candidates in TN

இதேபோல புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் வேட்பாளர் தேர்வுக்குழு தலைவராகவும் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரிக்கான குழுவில் உறுப்பினர்களாக, சுபாங்கர் சர்கார், முகுல் வாஸ்னிக், புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுக்கள்தான் தமிழக, கேரள, புதுவை மாநில காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும். கூட்டணி எல்லாம் முடிவான பின்னர் தேர்வு தொடங்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+