Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 13 நாட்கள் பிரதமர்! இதுவும் காங். ஆட்சிதான்! யார் இந்த குல்சாரிலால்?

Subscribe to Oneindia Tamil

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இவருக்கு முன்னதாக 3 முறை பிரதமராக ஆட்சியிலிருந்த ஜவஹர்லால் நேருவின் சாதனையை இதன் மூலம் மோடி சமன் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 95 ஆண்டுகள் கழித்து உருவான கட்சி பாரதிய ஜனதா கட்சி. அதாவது 1980களுக்குப் பின்னர் உருவான கட்சி இது.

lok sabha election 2024 Jawaharlal Nehru Narendra Modi

ஆனால், இந்தியாவில் ஒரு பழமையான கட்சியின் சாதனையை முறியடித்து இருந்துள்ளது. இது சாதாரண விசயம் இல்லை.

மோடி கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளார். முன்னாள் பிரதமர் நேரு அப்படியல்ல. அவர் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தார்.

எப்படிப் பார்த்தாலும் இது பாஜக என்ற தனிப்பெரும் கட்சிக்கு இது சாதனைதான். இப்போதைய கணக்குப்படி நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சி பாஜகதான்.

நாட்டின் முதல் பிரதமராகப் பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை, அவர் மாரடைப்பால் உயிரிழக்கும் வரை இந்தப் பதவியிலிருந்தார்.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் 286 நாட்கள் அவர் பதவியிலிருந்தார். மோடி இதுவரை 10 ஆண்டுகள் மற்றும் 15 நாட்கள் பிரதமராக இதுவரை ஆட்சி செய்த காலமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3ஆவது ஆட்சிக்காலத்தில் அவர் முடித்தால்தான் நேருவின் ஆட்சிக்காலத்தைச் சமன் செய்ய முடியும். இப்போதைக்கு அவர் நேருவைப் போலத் தொடர்ந்து 3 முறை பிரதமராகி இருக்கிறார் அவ்வளவுதான். நேருவின் சாதனையை முறியடிக்கவில்லை.

இந்தியாவின் அதிக காலம் பிரதமராகப் பதவியிலிருந்தவர் நேரு. காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் ஆட்சியிலிருந்தார். அந்தப் பெருமை அவரையே சேரும்.

இதே மாதிரி இந்தியாவில் மிகக் குறைந்த காலம் இருந்தவர் யார் என்பதைப் பார்த்தால், அதற்கு உரியவர் குல்சாரிலால் நந்தா. இவரும் காங். கட்சி சார்பில் நாட்டை ஆண்ட பிரதமர்தான்.

அதிக காலம் ஆட்சியிலிருந்த பெருமையும் காங்கிரசுக்குத்தான். குறைந்த காலம் ஆட்சியிலிருந்த பெருமையும் காங்கிரஸ் கட்சியைத்தான் சேரும்.

குல்சாரிலால் நந்தா பிறந்தது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சியால்கோட். அன்றைக்கு இந்தியா விடுதலைப் பெறவில்லை. 1898 ஜூலை 4 இல் பிறந்த குல்சாரிலால் தனது படிப்பை லாகூர் மேற்கொண்டார்.

அடுத்து ஆக்ரா மற்றும் அலகாபாத்தில் கல்வி கற்றார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் பிரச்சனைகள் ஆய்வாளராக (1920-1921) பணிபுரிந்தார்.

மேலும் 1921 இல் பம்பாய் தேசியக் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றினார். அதே ஆண்டு மகாத்மா நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1922 இல், அகமதாபாத் ஜவுளித் தொழிலாளர் சங்கத்தின் செயலாளராகப் பதவியேற்ற இவர், 1946 வரை அதில் நீடித்தார்.

அதனைத் தொடர்ந்து 1932 இல் நாடு முழுவதும் கிளர்ந்து எழுந்த சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். மறுபடியும் 1942 முதல் 44 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

குல்சாரிலால் நந்தா 1937 இல் முதன்முதலாகப் பம்பாய் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து 1937 முதல் 1939 வரை பம்பாய் மாகாண அரசின் நாடாளுமன்றச் செயலாளராக (தொழிலாளர் மற்றும் கலால்) பதவியில் அமர்த்தப்பட்டார்.

பின்னர், பம்பாய் அரசாங்கத்தின் தொழிலாளர் அமைச்சராக 1946 தொடங்கி 50 வரை இருந்தார். வெற்றிகரமாகத் தொழிலாளர் பிரச்சினைகளைக் கையாண்டார். மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபா நினைவு அறக்கட்டளையின் அறங்காவலராக பணியாற்றினார்.

இந்துஸ்தான் மஸ்தூர் சேவக் சங்கம்; பாம்பே ஹவுசிங் போர்டு, தேசிய திட்டக்குழு உறுப்பினர் எனப் பல அமைப்புகளில் உயர் பொறுப்புகளை அலங்கரித்தார் குல்சாரி.

இதை எல்லாம் தாண்டி இந்தியத் தேசிய தொழிற்சங்க காங்கிரஸை அமைப்பதில் பெரும் பங்காற்றினார், அதன் பின்னர் இதன் தலைவராக ஆனார்.

1947 இல், சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் அரசாங்கப் பிரதிநிதியாக ஜெனீவா சென்ற இவர், மாநாட்டால் நியமிக்கப்பட்ட 'தி ஃப்ரீடம் ஆஃப் அசோசியேஷன் கமிட்டி'யில் அங்கம் வகித்து பணியாற்றினார்.

ஸ்வீடன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள தொழிலாளர்களில் வாழ்க்கையை ஆராய்ந்தார்.

மார்ச் 1950 ஆம் ஆண்டு திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு மத்திய அரசில் திட்ட அமைச்சரானார். இவருக்கு நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் பொறுப்பும் வழங்கப்பட்டது. அவர் 1952 பொதுத் தேர்தலில் பம்பாயிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீர்ப்பாசனம் மற்றும் மின்சக்தி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1955 இல் சிங்கப்பூரில் நடைபெற்ற திட்ட ஆலோசனைக் குழு, 1959 இல் ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாடு ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த இந்தியப் பிரதிநிதிகளை இவர் வழிநடத்தினார்.

lok sabha election 2024 Jawaharlal Nehru Narendra Modi

மறுபடியும் 1957 பொதுத் தேர்தலில் மக்களவைக்குத் தேர்வானார். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைக்கு அமைச்சரானார்., இந்தக் காலகட்டத்தில்1959 இல் ஜெர்மனி, யுகோசுலாவியா மற்றும் ஆஸ்திரியா பயணம் மேற்கொண்டார்.

1962 பொதுத் தேர்தலில் குஜராத்தில் உள்ள சபர்கந்தா தொகுதியிலிருந்து மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1962 இல் சோசலிஸ்ட் கொள்கைகளை முன்வைத்து காங்கிரஸ் மன்றத்தைத் தொடங்கினார். அவர் 1962 மற்றும் 1963 இல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மத்திய அமைச்சராகவும், 1963 முதல் 1966 வரை உள்துறை அமைச்சராகவும் பல பதவிகளை ஏற்று நாட்டை வழிநடத்தினார்.

பண்டிதர் ஜவஹர்லால் மரணத்தையடுத்து. இவர் மே 27, 1964 இல் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார். மீண்டும் ஜனவரி 11, 1966 அன்று தாஷ்கண்டில் லால்பகதூர் சாஸ்திரியின் மரணத்தைத் தொடர்ந்து அவர் பிரதமராகப் பதவியேற்றார். ஆக, இந்தியாவில் குறைந்த காலம் ஆட்சியிலிருந்த பிரதமராக குல்சாரி தனது பெயரை வரலாற்றுப் பக்கங்களில் பதிய வைத்துக் கொண்டுள்ளார்.

அதாவது 1966 ஜனவரி 11 பதவியேற்ற இவர் 24 ஆம் தேதி வரை பதவியில் தொடர்ந்தார். வெறும் 13 நாள்களே இவரது ஆட்சிக்காலம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+