சிங்கிள் சிறுத்தையை, ஒரு ஊரே சேர்ந்து அடித்து கொன்ற பரிதாபம்.. அதிர்ச்சி வீடியோ
குருகிராம் அருகே கிராமத்தில் புகுந்த சிறுத்தை கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே கிராம மக்கள் சேர்ந்து ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பாக குர்கான் என அழைக்கப்பட்டு வந்த குருகிராம் அருகில் உள்ள மந்தாவர் கிராமத்திற்குள் வியாழக்கிழமை சிறுத்தை ஒன்று உணவு தேடி தவறுதலாக புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் அந்த சிறுத்தை பாய்ந்து திடீரென விரட்டியுள்ளது.

சுமார் 3 மணி நேரமாக அந்த சிறுத்தை அந்தக் கிராம மக்களை துரத்தி துரத்தி விரட்டியதாக கூறப்படுகிறது.
அங்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினராலும் அந்த சிறுத்தையை பிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கிராமத்திற்கு வெளியே சுந்தர் என்ற இளைஞர் அந்த சிறுத்தையை பார்த்துள்ளார். இந்நிலையில், கிராமத்திற்குள் புகுந்த அந்த சிறுத்தை மக்களை துரத்தி உள்ளது. இதற்கு முன்பாக அருகில் உள்ள கிராமத்தில் மாடு, ஆடு ஆகியவற்றை அந்த சிறுத்தை அடித்துக் கொன்றிருப்பதாக கிராம பஞ்சாயத்து தலைவர் தன்சிங் தெரிவித்துள்ளார்.
வனத்துறையினர் அந்த சிறுத்தையை சுட்டு பிடிப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தன்சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில்,அங்குள்ள வீட்டில் துணிதுவைக்கும் அறையில் சிக்கிய சிறுத்தையை கிராம மக்கள் ஒன்று கூடி அடித்துக் கொன்றனர்.
அதனைத் தொடர்ந்து அந்த செத்த சிறுத்தையை பிரதான சாலைக்கு இழுத்து வந்த கிராமத்தினர் அதனை சாலையில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மயக்க மருந்து செலுத்தி அந்த சிறுத்தையை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications