ஞானவாபி மசூதி: உண்மை வயது கண்டறியும் கார்பன் பரிசோதனை தொடர்பாக அக்.11-ல் உத்தரவு: வாரணாசி கோர்ட்
வாரணாசி: சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியின் உண்மை வயது தொடர்பான கார்பன் டேட்டிங் எனப்படும் கார்பன் பரிசோதனை தொடர்பாக அக்டோபர் 11-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரி முதன் முதலாக 1991-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 2019-ம் ஆண்டு ஞானவாபி மசூதியில் ஆய்வு கோரி வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் 2021-ம் ஆண்டு ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதித்தது. மேலும் டெல்லியை சேர்ந்த 5 பெண்கள், ஞானவாபி மசூதி வளாகத்தில் மா சிருங்கார் கௌரி உள்ளிட்ட தெய்வங்களை தரிசனம் செய்து வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த மே மாதம், ஞானவாபி மசூதியை வீடியோ பதிவு செய்ய தடை கோரி மஸ்ஜித் இந்த ஜாமியா என்ற முஸ்லிம் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகியது. சர்ச்சைக்குரிய சிவலிங்கம் பகுதியை பாதுகாக்கவும் தொழுகை நடத்த அனுமதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இவ்வழக்கை வாரணாசி நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து ஞானவாபி மசூதியில் இந்து தெய்வங்க்ளை வழிபட அனுமதி கோரிய 5 பெண்கள் மனுவை விசாரணைக்கு ஏற்றது வாரணாசி நீதிமன்றம். இவ்வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, ஞானவாபி மசூதியின் உண்மையான வயது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்கான கார்ப்ன் டேட்டிங் குறித்து அக்டோபர் 11-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications