நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி கூறிய தகவல் உண்மையில்லை: டான் பாஸ்கோ பள்ளி மறுப்பு
மும்பை: டான் பாஸ்கோ பள்ளி குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என்று அந்த பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் வெமுலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, வெமுலா தற்கொலை செய்த பிறகு வெகு நேரத்திற்கு டாக்டர்களை பரிசோதனை செய்ய அருகில் அனுமதிக்கப்படவில்லை.

சடலத்தை மறைத்து வைத்து அரசியல் நடந்தது. காவல்துறை 24 மணி நேரத்திற்கு அருகே கூட செல்ல முடியவில்லை. தெலுங்கானா அரசு இதற்கு முழு பொறுப்பு என்றார்.
மேலும், 'டீஸ்டா செடல்வாட்' எழுதிய புத்தகம், மும்பை டான் பாஸ்கோ பள்ளியில் பாடப்புத்தமாக படித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை தூண்டும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் (மண்டைக்காடு) இந்து-கிறிஸ்தவர் மோதிக்கொண்டனர் என்றெல்லாம் 4வது வகுப்பு பாடப்புத்தகத்தில் எழுதியிருந்தார் என்றார்.
டீஸ்டா செடல்வாட் இடதுசாரி ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளவர். சமீபத்தில் அவரது இல்லத்தில் சி.பி.ஐ சோதனை நடத்தியிருந்தது.
இந்நிலையில், டான் பாஸ்கோ பள்ளி முதல்வர் ஃபாதர் பெர்னார்ட் பெர்ணான்டஸ் கூறுகையில், "இரானி கூறியது போல அது பாடப்புத்தகம் கிடையாது. ஹேண்ட் புத்தகம். ஓராண்டு அதை சோதனை அடிப்படையில் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால் 2001ம் ஆண்டு முதல் அந்த பாடம் சொல்லி கொடுப்பதை நிறுத்தி விட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெமுலா, சடலம் அருகே டாக்டர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று இரானி கூறிய கருத்தை, வெமுலாவின் தாயார் மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications