ரயிலில் தன்னை கிண்டல் செய்த நபர் பற்றி ட்வீட் போட்ட பெண்: கைது செய்த போலீசார்
பாட்னா: டெல்லியில் இருந்து பீகாருக்கு ரயிலில் தனியாக பயணம் செய்த இளம் பெண் தன்னை கிண்டல் செய்து, அசிங்கமாக நடந்து கொண்டவர் பற்றி ட்வீட் போட்டதை பார்த்து ரயில்வே அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த நபரை கைது செய்தது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு தனியாக பயணம் செய்துள்ளார். அவர் தனியாக பயணிப்பதை கவனித்த ஒரு ஆண் அவரை கிண்டல் செய்ததுடன் அசிங்கமாக நடந்து கொண்டார்.

அவரின் செயலை தாங்க முடியாத அந்த பெண் இது குறித்து ட்விட்டரில் தெரிவித்தார். அவரது ட்வீட்டை பார்த்த ரயில்வே அமைச்சகம் உடனே இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.
ரயில்வே போலீசார் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். சரியான நேரத்தில் உதவியதற்காக அந்த பெண் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கும், அவரது அமைச்சகத்திற்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணை கிண்டல் செய்து, அசிங்கமாக நடந்து கொண்ட நபர் தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications