நம்ம "பஜ்ஜி" பொங்கலுக்கு தமிழ்ல டிவிட் போட்டது இதுக்குதானா?!
ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு: ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வெரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளன. மே மாதம் வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மீண்டும் விளையாடவுள்ளது. டோணி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

ஐபிஎல் ஏலம்
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

சிஎஸ்கேவில் ஹர்பஜன்
இன்று இதுவரை நடைபெற்ற ஏலத்தில் சென்னை அணி பிராவோ, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால் தமிழக வீரரான அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் நழுவவிட்டது.

ஹர்பனை வாங்கிய சிஎஸ்கே
ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸால் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். 2 கோடிக்கு இவர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

பஜ்ஜி பொங்கல் வாழ்த்து
இதனை தெரிந்துதான் ஹர்பஜன் சிங் தமிழில் தமிழர்களுக்காக பொங்கல் வாழ்த்து சொன்னாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஜனவரி 13ஆம் தேதி ஹர்பஜன் சிங் தமிழ் மக்களுக்கு டிவிட்டர் வாயிலாக பொங்கல் வாழ்த்து கூறினார்.
|
இதயம் கனிந்த தமிழர் திருநாள்
வேகமும் , விவேகமும் , உழைப்பும் , தூய்மையும் சொத்தாய் கொண்ட தமிழ் மக்கள் வாழ்வில் மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல் என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உங்கள், ஹர்பஜன் சிங்.. இவ்வாறு வாழ்த்தியிருந்தார் பஜ்ஜி என்று செல்லமாக அழைக்கப்படும் ஹர்பஜன் சிங்
|
தமிழ் நண்பர்களே
இதேபோல் கடந்த 24ஆம் தேதியும் ஹர்பஜன் தமிழில் தமிழ் நண்பர்களே டிவிட்டியுள்ளார். அதில் செயல்திறன் எப்போதும் பேரார்வம் மூலம் மட்டுமே வெளிப்படுமே தவிர அழுத்தத்தால் அல்ல. எப்போதும் உள்ளத்தின் உணர்ச்சியோடு செயலாற்றுங்கள் விரும்புவதை செயலாற்றுங்கள் செயலாற்றுவதை விரும்புங்கள் வணக்கம் என் இனிய தமிழ் நண்பர்களே எனத் தெரிவித்துள்ளார்.

நம்ம டிசைன் அப்படி
எப்படியும் தமிழ்நாட்டில்தான் விளையாடப் போகிறோம் ஆகையால் முன்னரே ரசிகர்களுக்கு வலையை போட்டு வைப்போம் என்று ஹர்பஜன் தமிழில் டிவிட் போட்டாரோ என்னவோ. அவர் தமிழில் டிவிட் போடாமல் வந்து விளையாடினாலும் ரசிகர்கள் சிஎஸ்கே வீரர்களை கொண்டாடுவார்கள்.. ஏன்னா நம்ம டிசைன் அப்படி..
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications