காங்கிரஸை ஆதரித்து குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரம் ... ஹர்திக் படேலின் தந்தை
அகமதாபாத்: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தீவிரப் பிரசாரம் செய்யப் போவதாக ஹர்திக் படேலின் தந்தை பரத் படேல் கூறியுள்ளார்.
தான் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படேல் சமுதாயமும் காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குஜராத்தில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஹர்திக் படேல் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும் வன்முறைக் களமாக இந்தப் போராட்டம் மாறியது. தற்போது தேசிய கொடியை அவமதித்ததாக ஹர்திக் படேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையி் அவரது தந்தை பரத் படேல் காங்கிரஸை ஆதரித்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபர்கந்தா மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பரத் படேல் பேசுகையில் எனது மகனுக்கும், படேல் சமுதாயத்திற்கும் இந்த பாஜக அரசும், காவல்துறையும் அநீதி இழைத்து விட்டன. கொடுமைப்படுத்தி வருகின்றன.
எனவே நான் காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படுவேன். எனது சமுதாயமும் காங்கிரஸ் பின்னால் நிற்கும். உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் காங்கிரஸை தீவிரமாக ஆதரித்து செயல்படுவோம் என்றார் பரத் படேல்.
மேலும் அவர் கூறுகையில், படேல் சமுதாயம் ஹர்திக் படேல் பின்னால் நிற்கிறது. இதை வரும் தேர்தலில் நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம் என்று அவர் கூறினார்.
குஜராத்தில் வருகிற 22ம் தேதி 6 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. பின்னர் 29ம் தேதி, 31 மாவட்ட பஞ்சாயத்து, 230 தாலுகா பஞ்சாயத்து, 56 நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications