தோல்வி பயமா? ஹரியானா சட்டசபை தேர்தல் தேதியை மாற்ற பாஜக திடீர் கோரிக்கை - விளாசும் காங்கிரஸ்!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று அம்மாநிலத்தில் ஆளும் பாஜக, இந்திய தேசிய லோக் தள் கட்சிகள் திடீரென கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா சட்டசபை தேர்தலில் தோல்வி பயம் தெரிவதாலேயே சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுப்பதாக காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 1-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். 2019-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாஜக- ஜேஜேபி கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. ஆனாலும் பாஜக அரசுக்கான ஆதரவை கடந்த மார்ச் மாதம் ஜேஜேபி வாபஸ் பெற்றது.
தற்போதைய தேர்தல் களத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுகிறது. இதனை அறுவடை செய்ய காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் காங்கிரஸுக்கு குடைச்சல் தரும் வகையில் ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் துஷ்யந்த் சவுதலா கட்சியின் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜக பக்கம் தாவி வருகின்றனர். இதனால் ஹரியானா தேர்தல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், ஹரியானா சட்டசபை தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று பாஜக , இந்திய தேசிய லோக் தள் உள்ளிட்ட கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளன. அக்டோபர் 1-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் வாக்குப் பதிவு சதவீதம் குறையக் கூடும்; ஆகையால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்கிறது பாஜக.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு தேர்தலில் தோல்வி அடைவோம் என்கிற பயம் கண்ணில் தெரிகிறது; அதனால்தான் தேர்தல் தேதியை மாற்ற வேண்டுகோள் வைக்கிறது என காங்கிரஸ் கன்டனம் தெரிவித்துள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications