ஹரியானா சட்டசபை தேர்தல்- தமிழக திமுக அரசின் 'தமிழ்ப் புதல்வன்' மாடலை களமிறக்கிய பாஜக அரசு!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஆளும் பாஜக அரசு அதிரடியாக மாணவர்கள், பட்டதாரிகளுக்கான நிதி உதவித் தொகையை அறிவித்துள்ளது. ஹரியானாவில் பிளஸ் டூ மற்றும் டிகிரி படித்த பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.900 முதல் ரூ.3,500 வரை வழங்கப்படும் என முதல்வர் நயாப் சிங் அதிரடியாக அறிவித்துள்ளார். ஹரியானா பாஜக அரசின் இந்த திட்டங்களால் 2.61 லட்சம் இளைஞர்கள் அரசிடம் இருந்து நேரடியாக வங்கி கணக்குகள் மூலம் மாதந்தோறும் நிதி உதவி பெறுவர்.
தமிழ்நாட்டில் திமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், பெண்களுக்கு மாத உதவித் தொகை, மாணவர்களுக்கான நிதி உதவி உள்ளிட்ட திட்டங்கள் இதர மாநில அரசுகளாலும் பின்பற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு அண்மையில்தான் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டமான தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போது சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசும் இதே பாணியில் மாணவர்கள், பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் நிதி உதவித் தொகை வழங்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வெளியிட்ட அறிவிப்புகள்
12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் ரூ.900 முதல் ரூ.1,200 வரை வழங்கப்படும்.
வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.
வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் முதுநிலை பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,500 வழங்கப்படும். இதன் மூலம் ஹரியானா மாநிலத்தின் 2.61 லட்சம் இளைஞர்கள் பயனடைவர்.
ஹரியானா சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் அக்னிவீரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆண்டு வருமானம் 1.8 லட்சம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications