Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹரியானா முதல்வர் வேட்பாளர் யார்? பாஜகவில் அடிதடி- நயாப் சிங் சைனியை அறிவித்தது மேலிடம்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் சீனியரான எனக்குதான் முதல்வர் பதவியை தர வேண்டும் என முன்னாள் அமைச்சரும் 6 முறை எம்.எல்.ஏ.வாக வென்றவருமான அனில் விஜ் போர்க்கொடி தூக்கி இருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஹரியானாவில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் தற்போதைய முதல்வரான நயாப் சிங் சைனிதான் என மத்திய அமைச்சரும் அம்மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

ஹரியானா சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அக்டோபர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

haryana assembly election 2024 haryana election 2024 2024 2024

ஹரியானாவில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடுகின்றன. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த துஷ்யந்த் சவுதலாவின் ஜேஜேபி கட்சி பீம் ஆர்மி சந்திரசேகர ஆசாத் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

பாஜக, காங்கிரஸில் கலகம்: ஹரியானாவில் 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் அதிருப்தி அலை எழுந்துள்ளது. அதே நேரத்தில் பாஜகவும் முன்னெப்போதும் இல்லாத வரலாறு காணாத உட்கட்சி மோதலை எதிர்கொண்டிருக்கிறது. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே சீட் கிடைக்காத சீனியர்கள் , சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறியழுததுடன் காங்கிரஸ் பக்கம் தப்பி ஓடிக் கொண்டே இருக்கின்றனர். இதேபோல காங்கிரஸ் கட்சியிலும் 42 பேர் அதிருப்தி வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.

எனக்கே முதல்வர் பதவி: இந்த நிலையில் ஹரியானா பாஜகவில் சீனியரான 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் அனில் விஜ் புதிய போர்க்கொடியைத் தூக்கினார். "ஹரியானா பாஜகவிலேயே மிகவும் சீனியர் நான்தான்.. 6 முறை எம்.எல்.ஏ.வாக வென்று மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன்.. ஆகையால் ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றால் எனக்குதான் முதல்வர் பதவி தர வேண்டும் என வலியுறுத்துவேன்" என கூறியிருந்தார் அனில் விஜ்.

யார் இந்த அனில் விஜ்?: ஹரியானாவில் முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு நயாப் சிங் சைனி முதல்வராக்கப்பட்டார். இதில் அதிருப்தி அடைந்த அனில் விஜ், நயாப் சிங் சைனிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். தற்போது பகிரங்கமாகவே தமக்குதான் முதல்வர் பதவியைத் தர வேண்டும் என கலகக் குரல் எழுப்பி இருக்கிறார்.

தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்: ஆனால் பாஜகவின் ஹரியானா மாநில மேலிடப் பிரதிநிதியான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஹரியானாவில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை நடத்த பாஜகவுக்கு மக்கள் நிச்சயம் வாய்ப்பு தருவார்கள். மக்கள் நலத் திட்டங்களை பாஜக செயல்படுத்தி இருக்கிறது. இளைஞர்களின் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும். ஹரியானாவில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனிதான் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

என்ன பதிலடியோ?: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த அறிவிப்புக்கு அனில் விஜ் தரப்பில் வரப் போகும் பதிலடிதான் ஹரியானா தேர்தல் களத்தில் தற்போதைய சூறாவளியாக எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+