"வினேஷ் போகத் ஜெயிச்சது சந்தோஷம்! ஆனால்.." சர்ச்சையை கிளப்பிய பிரிஜ் பூஷன் சிங்! என்ன சொன்னார்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்த போதிலும், அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரிஜ் பூஷன் சிங் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது குறித்து நாம் பார்க்கலாம்

ஹரியானாவில் மொத்தம் 90 சீட்கள் உள்ளன. அங்கு பாஜக ஆட்சியில் இருந்த நிலையில், சைனி முதல்வராக இருந்தார். எதிர்த்தரப்பில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் களமிறங்கியது.

haryana assembly election results 2024 2024 haryana assembly election 2024 haryana election 2024 2024

அங்குள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகக் கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். இதனால் தேர்தல் முடிவுகள் மீது எதிர்பார்ப்பு நிலவியது.

ஹரியானா தேர்தல் குறித்து வெளியான பெரும்பாலான எக்ஸிட் போல்களில் காங்கிரஸ் வெல்லும் என்றே சொல்லப்பட்டு இருந்தது. இருப்பினும், இன்று தேர்தல் முடிவுகள் வெளியான போது, நிலைமை மொத்தமாக மாறியது. ஏகப்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது. தற்போதைய சூழலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

அதேநேரம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட மல்யுத்த வினேஷ் போகத், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட யோகேஷ் குமாரை 6015 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதற்கிடையே வினேஷ் போகத் வெற்றி குறித்து முன்னாள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வினேஷ் போகத் வெற்றி பெற்றது சந்தோஷம் தான் என்ற அவர், ஆனால் அவர் செல்லும் இடத்தில் எல்லாம் பேரழிவு ஏற்படுவதாக விமர்சித்தார்.

இது தொடர்பாகக் கேள்விக்குப் பதிலளித்த பிரிஜ் பூஷன் சிங், "அவர் வென்றுள்ளாரா.. ரொம்ப சந்தோஷம்.. அதில் எனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை.. ஆனால், ஒன்று வினேஷ் போகத் எங்குச் சென்றாலும் அழிவு ஏற்படும். வேறு எதுவும் மிச்சம் இருக்காத அளவுக்கு அளவு ஏற்படும்.. இப்போது கூட பார்த்தீர்களா, காங்கிரஸ் அழிந்துவிட்டது.

எக்ஸிட் போல் முடிவுகளில் கூட காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போகிறது என்று சொன்னார்கள். ஆனால், ஹரியானாவில் கருத்துக்கணிப்பு முற்றிலும் தவறானது. இப்போது அங்குத் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சியை அமைக்கிறது. அவர் முதலில் மல்யுத்த வீரர்களிடையே பேரழிவை ஏற்படுத்தினார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளார்" என்றார்.

மேலும், ஜம்மு காஷ்மீர் தேர்தலில் இந்தியக் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறுகையில், "அங்குத் தேர்தலில் வெல்ல எல்லா முயற்சிகளையும் பாஜக செய்ததது. இருப்பினும், முடியவில்லை. அங்குக் கள சூழல் வேறு.. மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

இந்த பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராகத் தான் வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்தாண்டு போராட்டத்தை நடத்தினர். ஒரு கட்டத்தில் தங்கள் பதக்கங்களை எல்லாம் கூட கங்கை ஆற்றில் விடச் சென்றனர். அந்தளவுக்குப் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சர்ச்சை காரணமாக பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+