பகவத் கீதையை பள்ளிப் பாடமாக்க ஹரியானா அரசு முடிவு
சண்டிகார் : ஹரியானா மாநில பள்ளிப் பாடத்தில் பகவத் கீதையை பாடமாக சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி இந்தியா வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு பகவத் கீதையைப் பரிசாக அளித்து வருகிறார். சமீபத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. குறிப்பிட்ட மதம் ஒன்றைச் சேர்ந்த நூல் ஒன்றை எப்படி தேசிய நூலாக அறிவிக்க முடியும் என சர்ச்சை வெடித்தது. அதற்குப் பதில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

இந்நிலையில், ஹரியானாவிலுள்ள பள்ளிகளில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அடுத்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதையை பாடமாக சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மா கூறுகையில், 'அடுத்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதையைப் பள்ளிகளில் பாடமாக சேர்க்க முடிவு செய்துள்ளோம். பகவத் கீதை வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை சொல்லிக் கொடுக்கிறது. மனஅழுத்தத்தை போக்கும் வழிகளை கற்றுக் கொடுக்கிறது.
கீதையை வயதானவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஒதுக்கி விட முடியாது. வாழ்க்கை முழுவதும் ஒருவர் கீதையை வழிகாட்டியாக படிக்க தகுந்தது. கீதைதான் நமது வாழ்க்கை முறை. கீதையே நமது அறிவியல். கீதையே நமது பிரச்சனைகளுக்கு தீர்வு' எனத் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications