விசாரணைக்கு ஒத்துழைக்காத ஹனிபிரீத்.. உண்மையை கக்க வைக்க "நார்கோ"வை கையில் எடுக்கும் போலீஸ்!
விசாரணைக்கு ஹனிபிரீத் இன்சான் ஒத்துழைக்காததால் அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்யலாம் என ஹரியானா போலீஸ் திட்டமிட்டுள்ளது.
சண்டீகர்: கைது செய்யப்பட்ட ராம் ரஹீமின் தத்து மகள் ஹனிபிரீத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஹரியானா போலீஸ் திட்டமிட்டுள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற இயக்கத்தின் தலைவராக உள்ளவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் ஆவார். இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் சிர்சா நகரில் ஆசிரமத்தை தொடங்கினார். இங்கு கடந்த 2002-ஆம் ஆண்டு இரு பெண் சீடர்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறையை தூண்டிவிட்டதே ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் என்று தகவலறிந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்த ஆயத்தமாகினர்.

ஹனிபிரீத் தலைமறைவு
இதனை அறிந்த ஹனிபிரீத் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவர் எங்கும் தப்பி செல்லக் கூடாது என்பதற்காக அவருக்கு எதிராக போலீஸார் லுக் அவுட் நோட்டீஸை விடுத்தனர்.

ஹனிபிரீத்தின் பிரத்யேக பேட்டி
ஹனிபிரீத்திடம் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது அவரும் தனது தந்தையும் அப்பாவி என்றும், ஒரு பெண்ணால் எப்படி வன்முறையில் ஈடுபட முடியும் என்றும் கேட்டார். இதைத் தொடர்ந்து தனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கையிருப்பதாகவும் எப்படியும் குற்றமற்றவள் என நிரூபிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹனிபிரீத் கைது
இந்த பேட்டி கொடுத்த சில மணி நேரங்களில் ஹனிபிரீத்தை கைது செய்த பஞ்சாப் போலீஸார் அவரை ஹரியானா போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹனிபிரீத் ஒத்துழைக்கவில்லை
ஹனிபிரீத்திடம் ஹரியானா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தெரிகிறது. இதனால் அவரிடம் உண்மைக் கண்டறியும் சோதனை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications