குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் மும்பையில் கைதா?
குர்மீத் ராம் ரஹீமின் மகள் ஹனிப்ரீத் இன்சான் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.
சண்டிகர் : பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குர்மீத் ராம்ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சான் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.
அரியானா மாநிலம், சிர்ஸாவில் உள்ள தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் கைது செய்யப்பட்டு ரோட்டக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

ராம் ரஹீமின் ஆசிரமத்தை அவரது மகள் ஹனிப்ரீத் தலைமை ஏற்று நடத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால் ராம் ரஹீமின் மகள் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் தலைமறைவாகியுள்ளார். ரோஹத்கில் தனது தந்தையை பார்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார் ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் ஹனிப்ரீத்திற்கு தேரா ஆசிரமம் தொடர்பான அனைத்து விவரங்களும் இருப்பதால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவருக்கு லக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நலையில் ஹனிப்ரீத் மும்பையில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இது உறுதியான தகவல் இல்லை என்றும் அவரைத் தேடும் பணி தொடர்வதாகவும் ஹரியானா போலீஸ் தலைவர் பி எஸ் சந்து கூறியுள்ளார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications