For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனந்த் குமாரை வியக்க வைத்ததா நிலகேனிக்கு ஆதரவான ப்ளாஷ் மாப்?

By Siva
|

பெங்களூர்: பெங்களூரில் உள்ள மீனாட்சி மாலில் காங்கிரஸ் வேட்பாளர் நந்தன் நிலகேனிக்கு ஆதரவாக இளைஞர்கள் சிலர் திடீர் என்று நடனம் ஆடி(ப்ளாஷ் மாப்) ஆதரவு கேட்டனர்.

தெற்கு பெங்களூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நந்தன் நிலகேனி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தெருத் தெருவாக சென்று வாக்கு கேட்பது, அரசு பேருந்தில் பயணம் செய்வது, சாலையோர டீக்கடைகளில் டீ குடித்தபடி ஆதரவு கோருவது ஆகியவற்றை செய்து வருகிறார்.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள ராயல் மீனாட்சி மாலில் திடீர் என்று வாலிபர்கள், மாணவர்கள் என்று 20 பேருக்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். அங்கு அவர்கள் பல பிரபல பாடல்களுக்கு நடனம் ஆடி பொருட்கள் வாங்க வந்த மக்களிடம் நிலகேனிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

திடீர் என்று இத்தனை பேர் நடனம் ஆடியது மாலில் இருந்தவர்களை அதிசயிக்க வைத்தது.

இது குறித்து நடனம் ஆடிய ஜெய் என்ற சட்ட மாணவர் கூறுகையில்,

Has Nandan Nilekani's flash mob surprised Ananth Kumar?

நம் நகரம் மற்றும் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு இன்போசிஸ் மூலம் நந்தன் பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர். இந்திய அரசியலுக்கு தேவையான ஒருவர் என்றார்.

நடனம் ஆடியவர்களை பொது மக்கள் பாராட்டியதுடன் நிலகேனிக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

தெற்கு பெங்களூர் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற பாஜகவைச் சேர்ந்த அனந்த் குமார் இம்முறையும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
This weekend saw a group of youngsters break into a flash mob at Royal Meenakshi Mall on Bannerghatta road. The youth, a mix of students and young professionals, were dancing in support of Mr. Nandan Nilekani, the Congress candidate from Bangalore South in the upcoming Loksabha elections. The twenty somethings danced on popular songs like Rang De Basanti and ended it with a passionate appeal to the excited shoppers to vote for Nandan Nilekani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X