ஸ்ரீதேவிக்கு இதற்கு முன்னர் மாரடைப்பு வந்துள்ளதா?... இறப்புக்கான காரணங்கள் இதுதானோ?

ஸ்ரீதேவிக்கு இதற்கு முன்னர் மாரடைப்பு வந்துள்ளதா என்ற கேள்விக்கு அவரது குடும்பத்தினர் இல்லை என்றே பதில் கூறியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஸ்ரீதேவிக்கு இதற்க்கு முன்பு மாரடைப்பு வந்துள்ளதா ?

    மும்பை: ஸ்ரீதேவிக்கு இதுவரை மாரடைப்பு வந்ததில்லை என்று உறவினர் சஞ்சய் கபூர் தெரிவித்தார். மேலும் அவர் இறப்புக்கான காரணம் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளே காரணமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.

    80-களில் மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு இன்று வரை ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எந்த மொழியாக இருந்தாலும் தனது அசாத்திய திறமையினால் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவார்.

    துபாய் சென்றார்

    துபாய் சென்றார்

    5 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் உறவினர் மோஹித் மார்வாவின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கணவர் போனி கபூர் மற்று்ம மகள் குஷியுடன் சென்றிருந்தார்.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. மருத்துவர்களும் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

    இன்று உடல் வருகிறது

    இன்று உடல் வருகிறது

    அவருக்கு நேற்று உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர் அவரது உடல் நேற்று இரவே மும்பை வருவதாக இருந்தது. ஆனால் உடற்கூறு ஆய்வில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்று அவரது உடல் வருகிறது.

    அதிக அக்கறை

    அதிக அக்கறை

    மதியம் 12.30 மணிக்கு இறுதி சடங்குகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உடற்பயிற்சி, ஜிம் என்று எப்போதும் தனது உடலை பிட்டாக வைத்து கொள்வதில் ஸ்ரீதேவி அதிக அக்கறை எடுத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

    மாரடைப்பு ஏற்பட்டதில்லை

    மாரடைப்பு ஏற்பட்டதில்லை

    அவர் பொரித்த உணவுகளை சாப்பிட்டு 30 ஆண்டுகள் ஆகிறதாம். இந்நிலையில் அவருக்கு இதற்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதில்லை என்று அவரது கொழுந்தனார் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.

    என்றும் இளமை

    என்றும் இளமை

    அவர் முகத்தில் சுருக்கங்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவும் தன் அழகை மெருகூட்டவும் 6 முறை பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்துள்ளார். மேலும் பாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அவரை 40 வயதுக்கும் குறைந்த வயதுடைய பெண்ணாக இருப்பதற்காக அவர் மருந்துகளை உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவையே அவரது உயிரை குடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+