குழந்தைகள் இருப்பதை மறைத்துவிட்டுத்தான் திருமணம் செய்தார்.. மனைவி மீது புகார் வைக்கும் ஷமி
முகமது ஷமி தற்போது அவரது மனைவி ஹசின் ஜகான் கூறிய புகார்களுக்கு பதில் அளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: முகமது ஷமி தற்போது அவரது மனைவி ஹசின் ஜகான் கூறிய புகார்களுக்கு பதில் அளித்துள்ளார். ஹசின் ஜகான் ஏற்கனவே அவருக்கு குழந்தைகள் இருப்பதை மறைத்துவிட்டார் என்று ஷமி கூறியுள்ளார்.
ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜகான் கூறினார். ஷமி செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்று அவர் விவரம் அளித்துள்ளார். முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

எல்லாம் பொய்
இந்த நிலையில் ஹசின் ஜகான் கூறியது எல்லாமே பொய் என்று ஷமி கூறியுள்ளார். இதற்கு முன்பே பலமுறை அவர் இப்படி பொய் சொல்லி இருக்கிறார் என்றுள்ளார். தன்னிடம் ஹசின் ஜகான் பொய் சொல்லியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்றுள்ளார்.

குழந்தை இருப்பதை சொல்லவேயில்லை
தற்போது ஷமி புதிய குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதன்படி ''என் மனைவிக்கு ஏற்கனவே குழந்தை பிறந்தது எனக்கு தெரியாது. இரண்டாவது திருமணம் என்று தெரியும். ஆனால் குழந்தைகள் இருக்கிறது என்பது தெரியாது. என்னை ஹசின் ஜகான் ஏமாற்றிவிட்டார்'' என்றுள்ளார்.

என் குழந்தைகள்
மேலும் ''நான் அந்த குழந்தைகள் இருவரையும் என்னுடைய குழந்தைகள் போலவே பார்த்துக் கொண்டேன். அவர்களுடைய உண்மையான தகப்பன் கூட இப்படி பார்த்து கொண்டு இருக்க மாட்டார். அவர்களை மிகவும் சந்தோசமாக, பாதுகாப்பாக வைத்துக் கொண்டேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பொய் சொன்னார்
மேலும் ''ஹசின் திருமண சான்றிதழிலேயே பொய் சொல்லி இருந்தார். எல்லோருக்கும் அவருக்கு முன்பே திருமணம் ஆனது தெரியும். ஆனாலும் திருமண சான்றிதழில் திருமணம் ஆகவில்லை என்று பொய் சொன்னார். இதற்கே அவருக்கு தண்டனை கொடுக்க முடியும்'' என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications