ஜூன் 12ல் பெங்களூரில் யுனைடெட் வேயின் நந்தி ஹில்லதான்: டோன்ட் மிஸ் இட்
பெங்களூர்: யுனைடெட் வே பெங்களூர் பிரிவு வரும் ஜூன் மாதம் 12ம் தேதி நந்தி ஹில்லதானை நடத்துகிறது.
யுனைடெட் வே அமைப்பின் பெங்களூர் பிரிவு பெங்களூரில் உள்ள நந்தி மலை மற்றும் முக்கிய இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு வரும் ஜூன் மாதம் 12ம் தேதி நந்தி ஹில்லதான் நிகழ்ச்சியை நடத்துகிறது.

நந்தி ஹில்லதானில் வாக்கத்தான், மாரத்தான் மற்றும் குடும்ப கேளிக்கை நிகழ்ச்சிகள் அடக்கம். மாரத்தான் காலை 7 மணிக்கு துவங்குகிறது. மாரத்தானில் கலந்து கொள்பவர்கள் 21 கிலோமீட்டர் தூரம் ஓட வேண்டும். காலை 8 மணிக்கு துவங்கும் வாக்கத்தானில் பங்கேற்பவர்கள் 6 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.
மாரத்தான் மற்றும் வாக்கத்தான் ஆகிய இரண்டுமே நந்தி மலையடிவாரத்தில் இருக்கும் டிஸ்கவரி வில்லேஜில் இருந்து துவங்கும். குடும்ப கேளிக்கை நிகழ்ச்சிகள் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும். கில்லி, கோலிக் குண்டு, பம்பரம் சுற்றுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
மாரத்தானில் வெற்றி பெறுபவர்களுக்கு(ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு) பரிசாக ரூ.30 ஆயிரம் அளிக்கப்படும், வாக்கத்தானில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
நந்தி ஹில்லதான் நிகழ்ச்சி விபரம்,
காலை 6 முதல் 6.45 மணி வரை ஹில்லதானுக்கான பெயர் முன்பதிவு நடைபெறும். (உங்களின் பெயரை பதிவு செய்ய www.nandihillaton.in
என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்.)
6.50 மணிக்கு பெயர்களை பதிவு செய்வது நிறைவடையும்
7 மணிக்கு மாரத்தான் துவங்கும்
7. 30 முதல் 10.30 மணி வரை குடும்ப கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும்
8 மணிக்கு வாக்கத்தான் துவங்கும்
10 மணிக்கு டிஸ்கவரி வில்லேஜில் பரிசளிப்பு விழா நடைபெறும்
நந்தி ஹில்லதான் பற்றி மேலும் விபரம் அறிய www.nandihillaton.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்
இந்த ஹில்லதானில் கலந்து கொள்ளுமாறு பெங்களூர் மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஹில்லத்தானில் கலந்து கொள்ள ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.
நந்தி மலையை அதன் பழமையான அழகை பெறச் செய்வது, தாங்கள் வசிக்கும் பகுதியை மேம்படுத்த சமூகங்கள், குழுக்களை ஊக்குவிப்பது ஆகியவை தான் நந்தி ஹில்லத்தானின் நோக்கம் ஆகும்.
ஹில்லதான் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications