இயற்கைக்கு மாறாக உறவு... கணவருடன் சமரசமாக போக நடிகை யுக்தாமுகிக்கு ஹைகோர்ட் ஆலோசனை
மும்பை: கணவருடன் சமரசமாக பேசி தீர்வு காணுமாறு நடிகை யுக்தாமுகிக்கு ஹைகோர்ட் ஆலோசனை வழங்கியுள்ளது.
நடிகையும் முன்னாள் உலக அழகியுமான யுக்தா முகி நாக்பூரை சேர்ந்த ஓட்டல் அதிபர் பிரின்ஸ் டுலி என்பவரை காதலித்து கடந்த 2008-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கணவரை பிரிந்து யுக்தாமுகி தனது மகனுடன் மும்பையில் உள்ள பெற்றோருடன் வசித்து வருகிறார்.
36 வயதாகும் யுக்தாமுகி கணவர் மீது கடந்த மே மாதம் 16-ந்தேதி மும்பை போலீசில் புகார் செய்தார். அதில் கணவர் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், இயற்கைக்கு மாறாக உறவு கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

கணவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் மன ரீதியான பிரச்சினைகள் உள்ளன. என்னை பல வகையில் துன்புறுத்தினார்கள் என்றும் கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து யுக்தா முகியின் கணவர் பிரின்ஸ் டுலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து டுலி, அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் மும்பை ஹை கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரை கைது செய்யவும் தடை விதித்தது.
திங்களன்று இந்த வழக்கு நீதிபதி சாதனா ஜாதவ் விசாரணைக்கு வந்தது. அப்போது யுக்தா முகி கணவருடனான பிரச்சினைகளை அவசரமாக பேசி தீர்வு காணுமாறு ஆலோசனை வழங்கினார். மும்பை உயர்நீதிமன்றத்தில் இருவர் சார்பில் வக்கீல்கள் ஆஜராகினர். வரும் 30-ந்தேதி கணவன்- மனைவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications