பள்ளி வளாகத்தில் மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்- அவுரங்காபாத்தில்!
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே ஓஸ்மன்புராவில் உள்ள ஏக்நாத் நகர் மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருபவர் சுரேஷ் வாகுலே. இவர் அதே பள்ளியில் படித்து வந்த 12 வயது மாணவியை மிரட்டி, கடந்த 10ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மாணவியை சுரேஷ் மிரட்டியுள்ளார்.
வீடு திரும்பிய மாணவி பலாத்காரத்தால் உடல்நலம் பாதிக்கப் பட்டார். பெற்றோர் நடத்திய விசாரணையில் தலைமை ஆசிரியல் பலாத்காரம் செய்ததை அவர் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சுரேஷ் மீது அம்மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த சுரேஷை கடந்த 12ம் தேதி கைது செய்தனர்.
அவர் மீது பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு சுரேஷை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே மாணவியை போலீசார் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். மருத்துவப் பரிசோதனை முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் தெரிவிக்கப் பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவற்றைப் போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பள்ளி வளாகத்தில் சிறுமி ஒருவர் தலைமை ஆசிரியரால் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications