ஓடும் பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு- தலைமையாசிரியர் கைது
கொல்கத்தா: மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தலைமையாசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கம் மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் கல்னா என்ற இடத்தில் இருந்து பர்த்வான் நோக்கி ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் மித்தாபுக்கூர் பகுதியில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி நேற்று பிற்பகல் தனது தாயாருடன் பயணம் செய்தார்.

அருகருகே உட்கார சீட் கிடைக்காததால் அந்த மாணவி ஓரிடத்திலும், தாயார் மற்றொரு இடத்திலும் உட்கார்ந்து கொண்டனர்.
இந்நிலையில் அந்த சிறுமி அசந்து உறங்கி விட்டாள். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த ஆசாமி, அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் உறக்கம் கலைந்து எழுந்த மாணவி, பயத்தில் அலறி கூச்சலிட்டாள். விபரமறிந்த சிறுமியின் தாயாரும், மற்ற பயணிகளும் அந்த கொடூரனுக்கு தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் பினாய் தாஸ் என்றும் மேமாரி பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. பின்னர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். இதையடுத்து அவரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications