நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை எப்படி இருக்கிறது?
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பாக மருத்துவக் குழுவின் அறிக்கையை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். அவர் நலமுடன் இருக்கிறார்' என்கிறார், அவரது உறவினரும் நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன்.
நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ரஜினி. ஏற்கெனவே, 2011 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதன்பிறகு, ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது உடல்நலனைப் பரிசோதிப்பதில் ரஜினி அக்கறை செலுத்தினார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பேரிடர் காரணமாக, அவர் வெளிநாடு செல்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதன்பிறகு, மத்திய அரசின் அனுமதியோடு அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற தகவலும் வெளியானது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசியலுக்கு வருவதாகக் கூறி வந்த ரஜினி, ஐதராபாத்தில் அண்ணாத்த' படப்பிடிப்பில் இருக்கும்போது ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருகட்டத்தில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கிவிட்டார். கடந்த சில நாள்களுக்கு முன் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே' விருதைப் பெற்ற ரஜினிகாந்த், மிகுந்த உற்சாகத்தில் இருந்தார்.
நேற்று முன்தினம், தனது பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தைப் பார்த்தார். இதுதொடர்பாக, தனது மகள் சௌந்தர்யாவின் ஹூட் செயலியில் பகிர்ந்த ரஜினி, நான், என் மகள்கள், மருமகன் விஷால், மனைவி, சம்பந்தி மற்றும் பேரன்களுடன் அண்ணாத்த படத்தை பார்த்தோம். குறிப்பாக என் பக்கத்தில் உட்காந்து என் பேரன் முதன் முறையாக படம் பார்த்தான். படம் பார்த்து முடித்தவுடன் எனது பேரன் என்னை விடவே இல்லை. கட்டிப்பிடித்து தாத்து தாத்து படம் வெரி நைஸ்' என்றான்.
அவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தால் என்னை தாத்து' என அழைப்பது வழக்கம். படம் முடித்து வெளியே வந்த பிறகு கலாநிதி மாறன் திரையரங்குக்கு வெளியே காத்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது.
மணி 10க்கு மேல் இருக்கும்.. அப்போது என்ன சார் இங்க என கேட்டேன். இல்லை உங்களை பார்க்கணும் என்றார். பிசியான ஆளாக இருப்பவர், என்னை சந்திக்கனும் என்றார். எப்போதும் மேன்மக்கள் மேன் மக்களே' எனப் பதிவிட்டிருந்தார்.
- ரஜினி, தனுஷ் சம்மதித்தால் இருவரையும் வைத்து படம் இயக்குவேன்: கார்த்திக் சுப்பராஜ்
- "ரஜினி ரசிகர்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்துகொள்ளலாம்"
இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி. இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், இது வழக்கமான பரிசோதனைதான். அவரது உடல்நிலை குறித்து கவலைப்பட எதுவுமில்லை. அவர் நலமாக இருக்கிறார்' என்றார். மேலும், மருத்துவமனையில் ஒருநாள் தங்கியிருந்துவிட்டு பரிசோதனை முடிந்த பிறகு ரஜினி வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தார்.
இதன்பின்னர், மருத்துவமனையில் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த அவரது உறவினர் ஒய்.ஜி.மகேந்திரன், ரஜினி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நான் நேரில் பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்தார். அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை' என்றார்.
அதேநேரம், ரஜினியின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகள் எதுவும் வெளிவராததால், கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு ரசிகர்கள் விசாரித்த வண்ணம் இருந்தனர். இதன் தொடர்ச்சியாக, ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர், நடிகர் ரஜினிகாந்த் முழு உடல்நலத்துடன் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினியின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடு தொடர்பான பரிசோதனைகளும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
- இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆர்எஸ்எஸ் திட்டமா? அரசு தரப்பு சொல்வதென்ன?
- கார்பன் உறிஞ்சவேண்டிய காடுகளை கார்பன் உமிழ்கிறவையாக மாற்றிய மனிதர்கள்: அதிர வைக்கும் ஆய்வு
- பெகாஸஸ்: 'உளவு பார்த்தவர்கள் சர்வதேச அளவில் அம்பலப்படுவார்கள்' - என்.ராம்
- திரிபுராவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையால் பதற்றம்
- அ.தி.மு.க கொடி, பொதுச் செயலாளர் பதவி : சசிகலா செய்வது சட்டவிரோதமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













Click it and Unblock the Notifications