For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனியும் தம் அடிக்க யோசிப்பீங்களா.. யோசிப்பீங்களா.. ஒரு சிகரெட் விலையை ரூ3.50 உயர்த்த பரிந்துரை!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அதிரடியாக ஒரு சிகரெட்டின் விலையை ரூ3.50க்கு உயர்த்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

நாடாளுமன்ற நிதி நிலை அறிக்கைக் கூட்டத் தொடர் ஜூலை 7-ந் தேதி முதல் ஆகஸ்ட் 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதலாவது பட்ஜெட் ஜூலை 11-ந் தேதி தாக்கல் செய்கிறது

Health Ministry writes to Finance Ministry, demands cigarette price hike

இந்த நிலையில் புகையிலை பயன்பாட்டை முற்றிலும் குறைப்பதற்கான அறிவிப்புகள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் வகையில் சுகாதாரத் துறை அமைச்சகம் சில அதிரடி பரிந்துரைகளை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஒரு சிகரெட்டின் விலையை ரூ3.50 அளவுக்கு உயர்த்தலாம் என்பதும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அந்த பரிந்துரைகளில் ஒன்று. அதேபோல் 20 லட்சத்துக்கும் குறைவாக பீடி உற்பத்தி செய்வோருக்கான வரி விலக்கை திரும்பபெற வேண்டும் என்பது மற்றொரு பரிந்துரை.

இந்த பரிந்துரைகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில், புகையிலைப் பொருட்கள் என்பது சிகரெட், பீடி, குட்கா ஆகியவைதான். இவற்றால்தான் நோய்கள் அதிகமாக ஏற்படுகிறது. இவற்றின் விலையை மிக அதிகமாக்கிவிட்டால் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிடும். இதனாலேயே இவற்றின் விலையை மிக அதிகபட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.

ஆஹா! இனியும் தம் அடிக்க யோசிப்பீங்களா.. யோசிப்பீங்களா..?

English summary
In a move to discourage people from consuming cigarettes, the Health Ministry has written to the Finance Ministry to increase the taxes on cigarettes thereby increasing its price. The Health Ministry has urged the Finance Minister to increase the price of cigarette by Rs 3.5 per stick irrespective of its length
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X