Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோழி மாதிரியே.. பஸ் ஸ்டாண்டில் தோன்றிய "காளி" உருவம்.. கையில் மனைவியின் தலை.. மலைத்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கையில் ரத்தம் சொட்டும் "தலை"யுடன் குதித்து குதித்து வந்த நபரை பார்த்து, தலைதெறித்து ஓடிவிட்டனர் பொதுமக்கள்.. யார் இந்த மனித மிருகம்?

மேற்கு வங்க மாநிலம், பூர்பா மேதினிபூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. பதாஷ்பூர் அருகே சிஸ்திபூரை என்ற இடத்தை சேர்ந்தவர் கவுதம் குச்சாயத்.. 35 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் புல்ராணி..!!

Heart Breaking incident in West Bengal and Do you know whis is Bangali Man, what happened to his wife

தம்பதி: தம்பதிகளுக்குள் மனஸ்தாபமும், தகராறும் நடந்து வந்ததாக தெரிகிறது.. இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலையிலும் சண்டை நடந்துள்ளது.. இதனால் ஆத்திரமடைந்த சவுதம், அரிவாளை எடுத்து மனைவியின் "தலை"யை, கோழி அறுப்பது போல அறுத்துவிட்டார்.

பிறகு கையோடு "தலையை" எடுத்துக் கொண்டு, வெளியே வந்தார்.. ரோடு முழுக்க சொட்ட சொட்ட வழிந்த ரத்தத்துடன் நடந்து சென்றார்.. தெருவெல்லாம் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டே போனார்.. ஒருகையில் மனைவியின் "தலை", இன்னொரு கையில் அரிவாளுடன், வெறிப்பிடித்தவர் போல வேக வேகமாக நடந்தார்.. இதைப்பார்த்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.

பஸ் ஸ்டாண்டு: வீட்டிலிருந்து நடந்து சென்று அப்படியே, பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்தார்.. பஸ் ஸ்டாண்டில் கவுதம் நுழைந்ததுமே, அங்கு பஸ்ஸில் உட்கார்ந்திருந்த பயணிகள் உட்பட உயிரை கையில் பிடித்து கொண்டு, ஓட துவங்கினார்கள்.

பஸ் ஸ்டாண்டில், கையில் "தலை"யுடன் திடீரென குதித்து குதித்து ஆடினார்.. தனக்குத்தானே ஏதேதோ பேசினார்.. பிறகு ஒருகட்டத்தில் பஸ் ஸ்டாண்டில் போடப்பட்டிருந்த பெஞ்ச்-சில் கேஷூவலாக சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தார். பிறகு மறுபடியும் கெட்ட வார்த்தைகளில் திட்ட துவங்கினார். ஒருசிலர் இந்த சம்பவத்தையெல்லாம் அப்படியே செல்போனில் வீடியோவாக எடுத்து கொண்டனர்.

தலை : அதற்குள் தகவலறிந்து போலீசார் வந்துவிட்டனர்.. கையில் "தலை"யுடன் இங்குமங்கும் ரத்தக்களறியுடன் குதித்து கொண்டிருந்த, கவுதமை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் கையிலிருந்த அரிவாளிலும் ரத்தம் வழிந்தபடி இருந்தது..

மனைவியின் தலையிலும் ரத்தம் கொட்டிக் கொண்டேயிருந்தது. அதனால், கவுதமை போலீசாரால் உடனடியாக பிடிக்க முடியவில்லை.. அவரிடம் செல்லவே தயங்கிய நிலையில், நீண்ட நேரம் கழித்து, ஒருவழியாக மடக்கி பிடித்தனர்.

அரிவாள்: அரிவாளையும், "தலை"யையும் பறிமுதல் செய்தனர். அதற்கு பிறகுதான், கையிலிருக்கும் "தலை" மனைவியுடையது என்றும், கோபத்தில் கொன்றுவிட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. எதற்காக சண்டை? ஏன் மனைவியை கொன்றார் என்ற விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

பொதுவாக மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை காளி வழிபாடு பிரபலம்.. காளியே அவர்களின் பிரதான தெய்வமும்கூட.. வெறியுடன் குதித்தபோது, காளியைபோலவே காட்சியளிக்க கவுதம் முயன்றாராம். இதை பொதுமக்கள் போலீசாரிடம் சொன்னார்கள்.

முரட்டு சுபாவம்: இந்த கவுதம் இயல்பாகவே, முரட்டு சுபாவம் கொண்டவராக இருக்கிறாராம்.. சின்ன வயசில் இருந்தே இப்படித்தான் பயங்கரமான செயல்களை செய்துவிடுவாராம்.. கோரமான காரியங்களை செய்யவும் கவுதம் தயங்க மாட்டார் என்று அவரது பெற்றோர் கவலையுடன் சொல்கிறார்கள்..

இப்படித்தான் 3 வருடங்களுக்கு முன்பு, கொல்கத்தாவில் உள்ள அலிபூர் உயிரியல் பூங்காவுக்கு கவுதம் சென்றிருக்கிறார். அங்கே போயும் சும்மா இருக்காமல், பூங்காவிலிருந்த சிங்கம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதினாராம்.. அதற்கு பிறகு, பூங்கா ஊழியர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, கவுதமை சிங்கத்திடமிருந்து வலுக்கட்டாயமாக மீட்டிருக்கிறார்கள்.. சும்மா இருந்த சிங்கத்துடன் கவுதம் மோதியதில், உடம்பெல்லாம் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

ரத்தவாடை: இதோ இப்போது அரிவாளால் மனைவியின் கழுத்தை அறுத்து, ரோடெல்லாம் ஆட்டம் போட்டுள்ளார். பஸ் ஸ்டாண்டிலிருக்கும் ஒரு டீக்கடைக்கு போனாராம் கவுதம்..

அங்கே போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்துள்ளார்.. ஒருபக்கம் தலையையும், இன்னொரு பக்கம் அரிவாளையும் வைத்துக் கொண்டு பெஞ்சில் கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தாராம்.. அந்த நேரத்தில் ஒருத்தரும் அவர் அருகில் செல்லவில்லை.. போலீஸ் மட்டும்தான் அருகில் சென்று அவரை சுற்றி வளைத்து பிடித்துள்ளது.

கவுதம் ஒரு நடைபாதை வியாபாரியாம்.. மனைவி மீது சந்தேகப்பட்டு வந்துள்ளதால், இப்படி ஒரு கொடூர கொலை நடந்திருக்கலாம் என்கிறார்கள்.. துண்டித்த "தலை"யுடன் பஸ் ஸ்டாண்டு பெஞ்சில், கூலாக உட்கார்ந்திருந்தி கவுதமின் வீடியோவும், போட்டோவும்தான் இணையத்தை பரவி "ரத்தவாடை" வீசிக் கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+