"அசையவே" இல்லை.. சத்தமும் இல்லை.. கிட்ட போய் பார்த்த மக்கள்.. பயங்கர அதிர்ச்சி.. "சாய்பாபா கோயிலில்"

சாய்பாபாவை வணங்கும்போதே இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது

Subscribe to Oneindia Tamil

போபால்: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. அதை பார்ப்பவர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்துள்ளனர்.. காரணம் என்ன தெரியுமா?

மத்திய பிரதேச மாநிலம் கட்னியில் ஒரு சாய்பாபா கோயில் இயங்கி வருகிறது.. இது சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.

தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்துவிட்டு போவார்கள்.. அந்தவகையில் ராஜேஷ் மேஹானி என்ற இளைஞர், சாய்பாபாவை தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்துள்ளார்..

 மெடிக்கல் ஷாப்

மெடிக்கல் ஷாப்

கட்னி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த ராஜேஷ் மேஹானி... மெடிக்கல் ஷாப்பை சொந்தமாகவே வைத்து நடத்தி வருகிறார்.. சின்ன வயசில் இருந்தே ஷீரடி சாய்பாபாவின் தீவிரமான பக்தராம்.. வியாழக்கிழமையானால், இந்த சாய்பாபா கோவிலுக்கு காலையிலேயே வந்து ஆஜராகிவிடுவாராம் ராஜேஷ்.. அப்படித்தான், கடந்த 1ம் தேதியும் இந்த ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு வந்திருந்தார்.. எப்போதுமே சாய் பாபாவின் பாதங்களை பக்தர்கள் தலைவைத்து வணங்குவது வழக்கம். எனவே, ராஜேஷ் மேஹானியும், முழங்காலிட்டு உட்கார்ந்து கொண்டு, பாபாவின் பாதங்களில் தலையை வைத்து வணங்கினார்..

 முரட்டு பக்தர்

முரட்டு பக்தர்

அப்படியே 15 நிமிடங்கள் உட்கார்ந்திருந்தார். அசைவே இல்லை.. அதற்கு பிறகும் அவர் எழவேயில்லை.. இவருக்கு பின்னால், முழங்காலிட்டு சாய்பாபாவை வணங்க ஏராளமானோர் காத்திருந்தனர்.. 15 நிமிஷத்துக்கு மேலாகியும் ராஜேஷ் எழாத காரணத்தினால், அவரை பக்தர்கள் தட்டி எழுப்பினர்.. ஆனால் அவர் அப்போதும் எழவில்லை.. இதனால், செய்வதறியாது தவித்த பக்தர்கள், உடனடியாக கோவில் நிர்வாகத்தினரை அழைத்தனர். அவர்கள் வந்து ராஜேஷை எழுப்பினால், அப்போதும் எழவில்லை..

 காலடியிலேயே

காலடியிலேயே

மூச்சுபேச்சில்லாமல் முழங்காலிட்டபடியே ராஜேஷ் உட்கார்ந்திருந்தது தெரியவந்தது. அவரது தோளை தொட்டு உலுக்கி எழுப்பியபோது, ராஜேஷ் மெல்ல சரிந்து சரிந்து கீழே விழுந்தார்.. இதை பார்த்து பதறிப்போன கோயில் நிர்வாகிகளும், பக்தர்களும், இதனால் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, அதில் ராஜேஷையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.. ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.. சாய்பாபாவை வணங்கும்போதே ராஜேஷின் உடல் பிரிந்துள்ளது..

 ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக்

தியானத்தில் இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. முழங்காலிட்டு, கண்களை மூடிக்கொண்டு உயிர்பிரியும் ராஜேஷ் வீடியோ காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.. சாய்ந்தபடியே கீழே சரிந்துவிழும் இந்த வீடியோதான் இணையத்திலும் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பிவிட்டு வருகிறது. சாய்பாபாவின் காலடியிலேயே உயிர்போய்விட்டதே, ஆன்மா சாந்தியாகட்டும் என்று பலரும் இதற்கு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+