தெலுங்கானவில் கொதித்த வெப்பத்திற்கு 50 லட்சம் கறிக்கோழிகள் பலி!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 50 லட்சம் கறிக்கோழிகள் கடும் வெப்பத்திற்கு பலியாகியுள்ளன.
இதனால் கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் கடும் நஷ்டத்திற்கு உள்ளானதுடன், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கறிக்கோழியின் விலை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடும் வெப்பத்தால் நாளொன்றுக்கு லட்சக்கணக்ககான கோழிகள் பலியாகி வருவதாகவும், இதுவரை 57 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்னனர்.

குறிப்பாக மே 17 ஆம் தேதிக்கு பின் வெப்பநிலை 42 டிகிரியாக உயர்ந்ததால் கறிக்கோழிகள் செத்து மடியத் துவங்கின. வெயிலை தணித்து குளுமையை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களை புகுத்தியபோதும், ஒரு கட்டத்துக்கு மேல் அதுவும் எடுபடவில்லை.
இதனால் 2 லட்சம் கோழிகள் உள்ள தனது பண்ணையில் ஒரு சில நாளிலேயே 30 ஆயிரம் கோழிகள் இறக்க நேரிட்டதாக தெலுங்கானா கோழிப்பண்ணை கூட்டமைப்பு தலைவரான எர்ரபெள்ளி பிரதீப் ராவ் கூறியுள்ளார்.
கோழிகளின் இறப்பு அதிகமானதால் அம்மாநிலத்தில் முட்டை விலையும் அதிகரித்துள்ளது. கடந்த மே 17 ஆம் தேதி 100 முட்டைகள் 260 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், ஜூன் 3 ஆம் தேதி 100 முட்டையின் விலை 327 ஆக உயர்ந்துள்ளது. அதாவது நாளொன்றுக்கு 50 பைசா வீதம் முட்டை விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications