உத்தரபிரதேசத்தில் கடும் பனி மூட்டம்.. சாலையே தெரியவில்லை.. விபத்துகளில் 16 பேர் பலி
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பனிமூட்டம் காரணமாக நேற்று நிகழ்ந்த சாலை விபத்துகளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் நேற்று ஒரே நாளில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் , டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது.

இதனால் ஏரளாமான ரயில்கள், விமானங்கள் தாமதாமாக புறப்படுவதோடு ரத்தும் செய்யப்படுகின்றன. பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பனிமூட்டத்துடன் கடுமையான குளிரும் நிலவி வருவதால் நடைபாதைகளில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications