விடிய விடிய மும்பையை மூழ்கடித்த கனமழை – பள்ளிகளுக்கு “லீவ்”; ரயில் சேவை பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடும் மழை காரணமாக புறநகர் மெட்ரோ ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை நகரில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் முதல் அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் மழையால் மேற்கத்திய மற்றும் மத்திய ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில்கள் அந்தேரி வரை இயக்கப்படுகின்றன. அதே போல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கல்யாண் மற்றும் அதற்கு பின் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
தாதர் மேற்கு சானே குருஜிமார்க் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம், மகாலட்சுமி ஜங்ஷன், பூலாபாய் தேசாய் மார்க், கோபால் தேஷ்முக் ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நெரிசல் காரணமாக வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி செல்கிறது.

தாழ்வான பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று பேருந்து போக்குவரத்து கழகத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மும்பை பல்கலைக்கழகமும் தேர்வுகளை ஒத்திவைத்து உள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு, மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இன்று காலை 8 மணிவரையில் சிட்டியில் 180 மி.மீட்டர் மழை பதிவாகிஉள்ளது என்று மும்பை மாநகராட்சி பேரிடர் மேலாண்மை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications