சுழற்றி அடித்த சூறாவளி, கொட்டித் தீர்த்த மழை: இருளில் மூழ்கிய பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரில் புதன்கிழமை மாலை பெய்த கனமழை மற்றும் சூறாவளியால் 85 மின்கம்பங்கள், 44 மரங்கள் சரிந்து விழுந்தன.
கோடை காலம் துவங்கியதில் இருந்து பெங்களூரில் அவ்வப்போது இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பிற்பகலில் மேகம் கூடி மாலையில் பெய்யத் துவங்கும் மழை மணிக்கணக்கில் கொட்டித் தீர்த்துவிடுகிறது.

ஒவ்வொரு முறையும் கனமழை பெய்து தெருக்கள் எல்லாம் வெள்ளக்காடாகி விடுகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுழற்றி சுழற்றி அடித்த காற்றில் 44 மரங்கள் பெயர்ந்து விழுந்தன. மேலும் 85 மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.
கனமழையால் கோரமங்களா, ஒயிட்பீல்ட், ஹெப்பால் ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கின. மரங்களை அப்புறப்படுத்தி மின் வினியோகத்தை சீரமைக்க அதிகாரிகள் போராடினர்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை பெங்களூரில் 40 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது. இதனால் ஹெப்பால் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் 17 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்தனர்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications