ஒரே நாடுதான்.. அங்கே வெளியே வரமுடியாத அளவுக்கு பனி.. இங்கே வெளியே வர முடியாத அளவுக்கு வெயில்!
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பல அடி உயரத்துக்கு சாலையில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது.
தென் மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் அனல் காற்று வீசி வருகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

பனிமழை
நாடு முழுவதும் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் பனிமழை பெய்து வருகிறது.

கடும் குளிரு
சிம்லா, குஃப்ரி, மணாலி ஆகிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக கடும் குளிரும் நிலவி வருகிறது.

பல அடி உயரத்துக்கு பனி
இமாச்சல பிரதேச மாநிலத்தில் இமய மலைத்தொடரின் பிர் பஞ்சால் பகுதியிலுள்ள ரோதங் கணவாய் பகுதியிலும் பனிப்பொழிவு நீடிக்கிறது. இந்த கணவாய் வழியாக செல்லும் மணாலி - லே நெடுஞ்சாலையில், தற்போது பல அடி உயரத்துக்கு பனி உறைந்துள்ளது.

மக்கள் தவிப்பு
இதனால் மணாலி - லே நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளையும் பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளன. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

பயணிகள் திண்டாட்டம்
கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரால் கோடை வெப்பத்தை தணிக்க இமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற பயணிகள் திண்டாடி வருகின்றனர்.

அகற்றும் பணி
சாலைகளில் சூழ்ந்திருக்கும் பனிக்கட்டிகள் சாலை நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டு வருகின்றன. பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஏராளமான ஊழியர்களும் புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications