மாதுரி ரூ 12 லட்சம், ஸ்ரீதேவி ரூ 8 லட்சம்... கொடி கட்டிப் பறக்கும் 'ஹெராயின்' ஹீரோயின்கள்...!
டெல்லி: போதை பொருள் கடத்தலுக்கு மாதுரி தீட்ஷித், ஸ்ரீதேவி ராக்கி சாவந்த் என பிரபல நடிகைகளின் பெயரை கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பொதுவாக முறைகேடான தொழில் புரிபவர்கள், தங்களின் மொழி மற்றவர்களுக்கு புரியாவண்ணம் இருப்பதற்காக சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் அவை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வார்த்தைகளாக இருக்கும் என்று தான் நாம் இதுவரைக் கேள்விப் பட்டிருப்போம்.
ஆனால், கலா ரசிகர்களான போதைப் பொருள் கடத்தல் கும்பல் தற்போது சினிமா நடிகைகளின் பெயரை ரகசிய வார்த்தைகளாக பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் இந்திய சப்ளையர்களுக்காக டெல்லியில் உள்ள போதை மருந்து கும்பல் இது போன்ற ரகசிய வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயர்தரமான சரக்கு...
அதன்படி, நல்ல விலை போகும் உயர் தரமான ஹெராயின் போதை பொருளுக்கு , மாதுரி அல்லது ஸ்ரீதேவி பெயரிட்டு உள்ளதாம் கடத்தல் கும்பல்.
தரம் குறைந்த போதைப்பொருள்...
அதேசமயம் குறைந்த விலை கிடைக்கும் தரம் குறைந்த போதை பொருளுக்கு ராக்கி சாவந்த் பெயரை வைத்து உள்ளனராம்.
நல்ல விலை...
கிடைத்துள்ள தகவல்களின்படி, ஒரு கிலோகிராம் எடை உள்ள மாதுரி ஹெராயின் ரூ 12 லட்சத்திற்கும், ஒரு கிலோகிராம் ஸ்ரீதேவி ஹெராயின் ரூ. 8 லட்சத்திற்கும் விற்கப் படுகிறதாம்.
மவுசு கம்மி தான்...
'ராக்கி சாவந்த்' ஹெராயின் மிக குறைந்த விலைக்கு தான் விற்பனையாகிறதாம்.
கைப்பற்றப் பட்ட போதைப்பொருட்கள்...
கடந்தாண்டு போதை கும்பலிடம் இருந்து 34.32 கிலோ கிராம் போதை பொருளை கைப்பற்றிய டெல்லி போலீசார், 2012 இல் 61 கிலோகிராம் போதை பொருளையும், 2011 இல் 5 கிலோ போதைப் பொருளையும், 2010 ல் 26 கிலோ போதைப் பொருளையும் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications