கோவாவில் பலத்த பாதுகாப்பு.. வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி 144 தடை!
கோவா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுவதால் கோவாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பானாஜி: கோவாவில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவா சட்டசபை தொகுதிகள் மொத்தம் 40. இந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் இம்மாதம் 4ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதனால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவா அரசு செய்துள்ளது.

வட கோவாவின் 19 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கேம்பால் பாலபவனில் நடைபெறுகிறது. தென் கோவாவிற்கான வாக்கு எண்ணிக்கை போர்டாவில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றியுள்ள இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வட கோவாவில் மட்டும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். 83 சதவீத வாக்கு பதிவுகள் நடந்து கோவா சட்டசபைத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, மகாராஷ்டிரா கோமந்தக்கட்சி மற்றும் சுயேட்சைகள் என 251 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை 11.30 மணிக்கு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் வென்று ஆட்சியை பிடிப்பார்கள் என்று அப்போது தெளிவாக தெரிந்துவிடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications