ரயில் விபத்தில் படுகாயமடைந்த தமிழக பயணிகளை விமானம் மூலம் அழைத்துவர ஏற்பாடு: விரைந்தது மருத்துவக்குழு
புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்டு, ரயில்கள் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 900 பேர் படுகாயம் அடைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. விபத்து நடந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 பேருந்துகள் நிறுத்தப்பட்டு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அந்த வழித்தடத்தில் செல்லும் சென்னை - ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில், கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வர தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 101 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், 17 பேர் பயணம் மேற்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 53 பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், 14 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், மற்ற பயணிகளை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்புகள் உறுதி செய்யப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மருத்துவக் குழு ஒடிசா விரைந்துள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 நபர்களை முதலுதவி சிகிச்சைக்குப் பின் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வரில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் தயார் நிலையில் 4 அரசு மருத்துவமனைகள் உள்ளன. ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்க மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள், காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த 250 பயணிகளுடன் சிறப்பு ரயில் பாதராக் பகுதியில் இருந்து புறப்பட்டது. நாளை காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications