For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார்? தாய்-மகன் உள்பட காங்கிரஸில் 5 பேர் இடையே கடும் போட்டி..

Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டியில் 5 பேர் உள்ளனர். இதில் 6 முறை முதலமைச்சராக இருந்து மறைந்த வீரபத்ரசிங் மனைவி பிரதீபா சிங் மற்றும் மகன் விக்ரமாதித்ய சிங் உள்ளிட்ட 5 பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டி உள்ளது.

நேற்றைய வாக்கு எண்ணிக்கையின்போது பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் டிரெண்ட் மாறி கொண்டே இருந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை வகித்தனர்.

திடீர் ட்விஸ்ட்.. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை.. பின்தங்கிய பாஜக.. கருத்துகணிப்பு மாறியது திடீர் ட்விஸ்ட்.. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை.. பின்தங்கிய பாஜக.. கருத்துகணிப்பு மாறியது

காங்கிரஸ் கட்சி வெற்றி

காங்கிரஸ் கட்சி வெற்றி

தேர்தலில் மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் ஓட்டு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன்பிறகு தொடர்ச்சியாக ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 10.30 மணியளவில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்தது. இறுதியில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

அடுத்த முதல்வர் யார்?

அடுத்த முதல்வர் யார்?

இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் அடுத்த முதல் அமைச்சராகும் வாய்ப்பு கொண்ட 5 முக்கிய நபர்கள் யார்? அவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஜெய்ராம் தாகூர் வெற்றி

முதல்வர் ஜெய்ராம் தாகூர் வெற்றி

இமாச்சலின் முதல் அமைச்சராக உள்ள ஜெய்ராம் தாகூர் செராஜ் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில் 82.4 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. முதலில் சாச்சியோட் என அழைக்கப்பட்ட இந்த தொகுதி 2007க்கு பிறகு செராஜ் என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த தொகுதி பாஜகவின் கோட்டையாகும். இங்கு ஜெய்ராம் தாகூர் கடந்த 1998 முதல் வெற்றி பெற்று வருகிறார். கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸின் சேத் ராம் தாக்கூரை அவர் 11,254 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் முதலமைச்சரானார். இந்நிலையில் தான் மீண்டும் அந்த தொகுதியில் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் இன்னும் மக்களுக்கு தேவையான சாலை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படும். இதனால் மீண்டும் காங்கிரஸ் சார்பில் சேத் ராம் தாகூரை மீண்டும் களமிறங்கி உள்ளார். இருப்பினும் இந்த தொகுதியில் தற்போது ஜெய்ராம் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் பாஜக ஆட்சியை இழந்துள்ளதால் முதல்வர் கனவு பறிபோனதோடு, அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி உள்ளார். முன்னதாக இவர் மீது கட்சி மேலிடத்துக்கு நம்பிக்கை இல்லாததால் தான் முதல்வர் வேட்பாளராக இவரது பெயரை அறிவிக்காமல் பாஜக தேர்தலை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் சுரேஷ் பரத்வாஜ் தோல்வி

பாஜகவின் சுரேஷ் பரத்வாஜ் தோல்வி

இதற்கு அடுத்த படியாக கசும்ப்டி சட்டசபை தொகுதி கவனம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 68.3 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. இந்த தொகுதியில் பாஜக சார்பில் சுரேஷ் பரத்வாஜ் போட்டியிட்டுள்ளார். இவர் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சாரக இருந்தார். இவர் கடந்த 4 முறை சிம்லா நகர்புற தொகுதியில் 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இவர் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் தொகுதி மாறி களமிறங்கி உள்ளார். இந்த கசும்ப்டி தொகுதியில் கடந்த 2 முறை காங்கிரஸ் கட்சியின் அனிருத் சிங் வெற்றி பெற்றுள்ளார். 3வது முறையாக இவர் மீண்டும் களமிறங்கி உள்ளார். இதனால் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தொகுதியில் ஆப்பிள் விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிகம் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஆப்பிள் விவசாயத்துக்காகன தோட்டக்கலை முறையில் உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமாவும், பாஜகவுக்கு எதிரானதாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொகுதியில் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் காங்கிரஸின் அனிருத் சிங் வெற்றி பெற்றார்.

தியோக் சட்டசபையில் காங்கிரஸின் குல்தீப்

தியோக் சட்டசபையில் காங்கிரஸின் குல்தீப்

சிம்லா மாவட்டத்தில் உள்ள தியோக் சட்டசபை தொகுதியில் 74.96 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்த தொகுதியில் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் குல்தீப் ரத்தோர் போட்டியிட்டுள்ளார். இவர் தொகுதி மறுவரையறைக்கு பிறகு குமார்சைன் மற்றும் கோட்கர் போன்ற பகுதிகள் தியோக் தொகுதிக்குள் உள்ளன. இது ஆப்பிள் விவசாயத்தில் மிகவும் முக்கியமான தொகுதியாகும். இந்த தொகுதி இமாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வராக வீரபத்ரசிங் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். கடந்த முறை இந்த தொகுதியில் வித்யா ஸ்டோக்ஸ் என்பவர் நிறுத்தப்பட்டார். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராகேஷ் சிங் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் தொகுதியை மீட்டெடுக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் குல்தீப் ரத்தோர் போட்டியிட்டுள்ளார். பாஜக சார்பில் அஜய் ஷ்யாம் களமிறங்கி உள்ளார. இங்கு காங்கிரஸில் உள்கட்சி பூசல் உள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என இந்து சர்மா நினைத்த நிலையில் அது கைகூடவில்லை. இதனால் அதிருப்தி அடைந்து சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். இதில் குல்தீப் ரத்தோர் முன்னிலை வகித்து வந்த நிலையில் வெற்றியும் பெற்றார்.

முதல்வர் ஆசையில் காங்கிரஸ் வேட்பாளர்

முதல்வர் ஆசையில் காங்கிரஸ் வேட்பாளர்

அடுத்ததாக உனா மாவட்டத்தில் உள்ள ஹரோலி தொகுதியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த தொகுதியில் மொத்தம் 78 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியின் முதல்வராகும் கனவில் உள்ள ஒருவரான முகேஷ் அக்னிஹோத்ரி களமிறங்கி உள்ளார். இங்கு முகேஷ் அக்னிஹோத்ரியை எதிர்த்து பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் ராம் குமார் களமிறங்கி உள்ளார். இவர் கடந்த தேர்தலில் முகேஷ் அக்னிஹோத்ரி எதிர்த்து களமிறங்கி தோல்வியடைந்த நிலையில் மீண்டும் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் கடந்த 2003ம் ஆண்டு முதல் முகேஷ் அக்னிஹோத்ரி வெற்றி பெறும் நிலையில் பாஜக வெற்றி பெற முயற்சித்து வருகிறது. துவக்கத்தில் பத்திரிகையாளராக இருந்த முகேஷ் அக்னிஹோத்ரி, முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் தயவால் காங்கிரஸில் ஜொலிக்க தொடங்கினார். ராம் குமாருக்கு, 2017-ம் ஆண்டு தோல்வியடைந்த போதிலும் அவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் அக்னி ஹோத்ரி வெற்றி பெற்றார்.

காங்கிரஸில் மாஜி முதல்வரின் மகன்

காங்கிரஸில் மாஜி முதல்வரின் மகன்

அடுத்ததாக சிம்லா புறநகர் தொகுதி கவனிக்கும் வகையில் உள்ளது. இநு்த தொகுதியில் மொத்தம் 62.5 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விக்ரமாதித்ய சிங் களமிறங்கி உள்ளார். இவரது தந்தை வீரபத்ர சிங் 6 முறை முதல் அமைச்சராக இருந்தார். விக்ரமாதித்ய சிங்கின் தாய் பிரதீபா சிங் எம்பியாக உள்ளார். இவர் தான் இமாச்சல பிரதேச மாநில தலைவராக உள்ளார். விக்ரமாதித்ய சிங் கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தற்போது 2வது முறையாக அவர் களமிறங்கி உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் எதிர்கால முகம் என கருதப்படுகிறது. இங்கு பாஜக சார்பில் ரவி மேத்தா களமிறக்கப்பட்டுள்ளார். தற்போதைய சூழலில் விக்ரமாதித்ய சிங் முன்னிலை வகித்து வந்த நிலையில் வெற்றியும் பெற்றார்.

பிரதீபா சிங்-சுக்வீந்தர் சிங்கிற்கும் வாய்ப்பு

பிரதீபா சிங்-சுக்வீந்தர் சிங்கிற்கும் வாய்ப்பு

மேலும் முதல் அமைச்சர் பதவிக்கான போட்டியில் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் 6 முறை முதலமைச்சராக இருந்த விரபத்ரசிங்கின் மனைவியான பிரதீபா சிங்கின் பெயரும் முன்னிலையில் உள்ளது. இவர் தற்போது எம்பியாக உள்ளார். இதுதவிர சுக்விந்தர் சிங் சுகு என்பவரின் பெயரும் முன்னிலையில் உள்ளது. இதில் சுக்விந்தர் சிங் நாடான் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது அங்கு முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய காங்கிரஸ் ஆலோசனை செய்து வருகிறது. இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்திய பிரியங்கா காந்தியே முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.

English summary
In Himachal Pradesh, the counting of votes to determine who will be the next to take over the government is going on in full swing. There is a fierce competition between the Congress and BJP parties. In this case, who will be the next Chief Minister of Himachal Pradesh? The constituencies contested by the 5 major candidates that will determine that have attracted everyone's attention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X