காசு இல்லப்பா! கழிவறைக்கு மாதம் ரூ.25 வரி போட்ட காங் அரசு! மனுஷன் நிம்மதியா இருந்த ஒரே இடமும் போச்சே
சிம்லா: இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு, நகர்ப்புறங்களில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களை நேரடியாக பாதிக்கும் புதிய வரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விதியின் கீழ், மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஒவ்வொரு கழிப்பறைக்கும் மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும்.
பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மாநில கஜானாவிற்கு, பணத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழிப்பறைக்கும் ரூ. 25 கட்டணம் விதிக்கப்படும், இது மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் குடியிருப்பாளர்களை பாதிக்கும் ஒரு முடிவாகும்.

இந்த கட்டணம் ஏற்கனவே செலுத்தி வரும் கழிவுநீர் வடிகால் கட்டணத்துடன் கூடுதலாக இருக்கும் என்றும், சேகரிக்கப்பட்ட தொகை ஜல் சக்தி துறைக்கு செலுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
முந்தைய பாஜக அரசு முன்பெல்லாம் இலவசமாக தண்ணீர் வழங்கி வந்தது. ஆனால் இப்போது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து விலகி கழிவறைக்கே வரி போடும் நிலைக்கு போயுள்ளது காங்கிரஸ் அரசு. தற்போதைய நிர்வாகம் தற்போது ஒவ்வொரு மாதமும் ஒரு இணைப்புக்கு ரூ. 100 குடிநீர் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது, இது அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்படுகிறது.
பல நகர்ப்புற வீடுகளில் பல கழிப்பறைகள் இருப்பதால் நகர்ப்புறங்களில் இந்த வரி குறிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, கழிவறை கட்டுவது அவசியம் என்று அரசு ஒருபக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தது. இப்போது என்னடாவெனில் கழிப்பறைக்கு வரி போடப்படுகிறது. இதனால் குடும்பங்களுக்கு நிதி சுமை அதிகரிக்கிறது.
இந்த கொள்கை, முதலமைச்சர், சுக்விந்தர் சிங் சுகு அரசு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களின் பிரதிபலிப்பு ஆகும், வருவாய் ஈட்ட புதுமையான நடவடிக்கைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதை இது காட்டுகிறது. இந்த உத்தரவு நகர்ப்புறங்களுக்கு மட்டுமே பொருந்தும், அங்கு கழிவுநீர் உள்கட்டமைப்பு மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது, கிராமப்புறங்களில் இத்தகைய வசதிகள் குறைவாக இருக்கிறது.
சுகு அரசு இந்த புதிய கட்டணத்தை நடைமுறைப்படுத்தவும், திறமையாக செயல்படுத்தவும், வட்டார பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கட்டண வசூல் செயல்முறையை எளிதாக்கவும், ஜல் சக்தி துறையின் நிதியை பெருக்கும் நோக்கத்துடன் இதை செயல்படுத்துவதாக அரசு கூறினாலும், மக்கள் இதனால் அதிருப்தியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications