'அடிமை மொழி' ஆங்கிலத்தை விரட்டியடிப்போம்.. நாட்டு ஒருமைப்பாட்டுக்கு உதவுவது ஹிந்தியே..இது ஆர்எஸ்எஸ்
பெங்களூர்: இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்துள்ள ஆங்கிலத்தை விரட்டியடிக்கும் சக்தி ஹிந்தி மொழிக்கு உண்டு, நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டுமானால், ஹிந்தி பங்களிப்பு அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது பாஞ்சஜன்யா பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும், பாஞ்சஜன்யா பத்திரிகையில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் இதுபற்றி கூறியுள்ளதாவது: வெள்ளைக்காரர்கள் நாட்டை விட்டு சென்று இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவர்கள் கொண்டு வந்த ஆங்கில மொழிக்கு நாம் அடிமையாக கிடக்கிறோம்.

ஆங்கிலத்துக்கு நம்மை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் கும்பல்களை விரட்டும் சக்தி ஹிந்திக்கு உண்டு. சுப்ரீம்கோர்ட்டில் கூட அனைத்து அலுவல்களும் ஹிந்தியில் நடக்கின்றன. அரசின் கொள்கை முடிவுகள் ஆங்கிலத்தில் உள்ளன. இது மிகவும் ஆபத்தான போக்கு.
ஆங்கிலத்தை யாரும் விரும்பி கற்கவில்லை. ஆங்கிலேயர்களால் நம்மீது திணிக்கப்பட்டதுதான் ஆங்கிலம். நமது சுந்திரத்தை முழுமையாக பெற இன்னும் போராட வேண்டியுள்ளது. ஹிந்திக்கு மக்கள் ஆதரவு உள்ளது. ஆங்கிலத்துக்கு மார்க்கெட் மற்றும் கோர்ட் ஆதரவு உள்ளது. பாரதத்தை சுய மரியாதை கொண்ட தேசமாக மாற்ற வேண்டுமானால், ஹிந்தியை பலப்படுத்த வேண்டும்.
பலரும் பல மொழி பேசி பிரிந்துகிடக்கும் இந்தியாவை, ஹிந்தி ஒருங்கிணைத்து, நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பாற்றும். அதேநேரம், மாநில மொழிகளை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. பிற மொழி ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் நாட்டை துண்டாடுவதற்காக ஆங்கிலத்துக்கு கொடி பிடிக்கிறார்கள். இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications