For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்லாமியர்களின் மூதாதையர் யார் தெரியுமா? நம்ம ராமர் தான்.. பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு

Google Oneindia Tamil News

நாடியாத்: இந்துக்களுக்கு மட்டுமல்ல... இஸ்லாமியர்களுக்கும் ராமர் தான் மூதாதையர் என்று பாபா ராம்தேவ் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் குஜராத் மாநிலம் நாடியாத் என்ற இடத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல், மெக்கா, மெதினா அல்லது வாடிகன் நகரத்திலா கட்ட முடியும்?

Hindu deity ram was ancestor of hindus and muslims, claims baba ramdev

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவது என்பது வாக்குகளுக்காகவோ அல்லது அரசியலுக்காகவோ அல்ல. ஏன் என்றால் அவர் தான்.. இஸ்லாமியர்களுக்கும் மூதாதையர்.

இந்துக்களின் கடவுளாக வணங்கப்படும் ராமரை, இஸ்லாமியர்களுக்கும் மூதாதையர் என பாபா ராம் தேவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு பதிலடியாக காங்கிரசும் கடுமையாக விமர்சித்துள்ளது.

இது போன்ற சாமியார்களால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜகவை ஆட்சியில் அமர வைக்கமுடியும் என்று அக்கட்சி நம்புகிறது. அவர்கள் பாஜகவுக்கு மறைமுகமாக இது போன்று பேசி தேர்தல் நேரத்தில் உதவுவார்கள் என்று கூறியுள்ளது.

முன்னதாக, பாபா ராம் தேவ் கடந்த 2-ம் தேதியன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தினால் அயோத்தி நோக்கி இந்துக்கள் படையெடுப்போம், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் மட்டுமே தவிர்ப்பதாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Yoga guru Ramdev claimed that Hindu deity Ram was the ancestor of Hindus and Muslims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X