கார் விபத்து வழக்கு: சல்மான் கானின் டிரைவர் சூப்பராக பொய் சொல்கிறார்- அரசு தரப்பு வக்கீல்
மும்பை: காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் டிரைவர் பொய் சொல்வதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி இரவு மும்பை பந்திரா பகுதியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் உரிமம் இல்லாமல் காரை ஓட்டிச் சென்று சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றினார். இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கு மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஆண்டுக் கணக்கில் நடந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளாக வழக்கு விசாரணையின்போது சல்மான் தான் காரை ஓட்டியதாக கூறப்பட்டது. இந்நிலையில் அண்மையில் சல்மான் கானிடம் பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் டிரைவர் அசோக் சிங் நீதிமன்றத்தில் ஆஜராகி விபத்து நடந்த அன்று நான் தான் காரை ஓட்டினேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தபோது சல்மான் கான் தனது தங்கை அல்விரா கானுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கராத் கூறுகையில்,

பொய்
விபத்து நடந்த அன்று சல்மான் கான் தான் குடிபோதையில் காரை ஓட்டியுள்ளார். அப்போது அவரிடம் ஓட்டுநர் உரிமம் கூட இல்லை. அப்படி இருந்தும் காரை ஓட்டியுள்ளார்.
சம்பவத்தன்று நான் தான் காரை ஓட்டினேன் என்று சல்மானின் டிரைவர் பொய் சொல்லியுள்ளார். பொய் சொல்லிய அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிரைவர்
விபத்தை ஏற்படுத்தியதாக கூறும் அசோக் சிங் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஏன் மௌனமாக இருந்தார். இத்தனை ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு வந்து செல்லும் சல்மான் கானும் ஏன் அசோக்கை நீதிமன்றத்திற்கு வந்து உண்மையை தெரிவிக்குமாறு முதலிலேயே கூறவில்லை.

ஏன்?
அசோக் சிங் ஏற்படுத்திய விபத்தால் சல்மான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். அப்படி இருந்தும் அவரது குடும்பத்தார் அசோக் சிங்கை ஏன் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வேலையில் வைத்துள்ளனர்.

சல்மான்
சல்மான் தனது ஊழியர்களுக்கு உதவி செய்து வருகிறார். அதனால் நன்றிக் கடனை காட்ட அசோக் சிங் குற்றத்தை தான் செய்ததாக தெரிவித்து தனது எஜமானரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

விபத்து
சம்பவத்தன்று எத்தனை பேர் மீது கார் ஏறியது என்றே அசோக் சிங்கிற்கு தெரியவில்லை. அவர் சம்பவம் நடந்த இடத்திலும் இல்லை, காரை ஓட்டவும் இல்லை. சல்மான் கான் கைதாகி ஜாமீன் அளிக்கப்பட்ட பிறகே காவல் நிலையம் சென்று அவரை அழைத்து வந்துள்ளார் அசோக் சிங். அப்போது மீடியாக்கள் அவர்களை புகைப்படம் எடுத்தபோது கூட அசோக் சிங் நான் தான் காரை ஓட்டினேன் என்று ஏன் கூறவில்லை என்று காரத் கேள்வி எழுப்பினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications