இந்தியாவில் முதல் முறை.. வெடிகுண்டு புரளி கிளப்பியதற்கு கோகுலுக்கு கிடைக்கப்போகுது ஆயுள் சிறை
பெங்களூர்: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கோகுல் மீது ஆயுள் தண்டனை விதிக்கப்பட கூடிய சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெடிகுண்டு புரளி கிளப்பிய ஒரு குற்றத்திற்காக இந்தியாவில் முதல் முறையாக இந்த சட்டம் தற்போதுதான் பிரயோகிக்கப்படுகிறது.
டெல்லி மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸ்சப் மூலமும், தொலைபேசி மூலமும் மிரட்டல் விடுத்த வழக்கில், பெங்களூரில் வசித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கோகுல் (33) என்ற தனியார் ஊழியர் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின்போது, கடந்த சில மாதங்கள் முன்பு தனது மனைவி அனுராதாவை கொலை செய்த குற்றத்தையும் கக்கிவிட்டார். இந்நிலையில், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக 'The Suppression of Unlawful Acts Against Safety of Civil Aviation (SUASCA) Act 1982' என்ற சட்டப்பிரிவின்கீழ் கோகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்சட்டத்தின் பிரிவு 3(1)(d)-ன்படி, அதிகபட்சமாக இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியும். இதுவரை வெடிகுண்டு புரளி கிளப்பிய யார் மீதும் இந்த சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. விமான நிலையங்களில் வெடிகுண்டு சோதனை நடக்கும்போது ஏற்படும் காலதாமதத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இனிமேலும், இதுபோல விஷமிகள் புரளி ஏற்படுத்தாமல் இருக்க இந்த கடும் நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது.
2009ம் ஆண்டு, கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், நோய் கிருமியுடன் கூடிய ஊசியை வைத்துக்கொண்டு, விமானத்தை கடத்துவதாக மிரட்டினார். அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது மேற்கண்ட சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த சட்டத்திற்கு கோகுல் இரையாகியுள்ளார். ஆனால், புரளி கிளப்பியதற்கே இவர் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோகுல் மீது திட்டமிட்டு மனைவியை கொலை செய்த வழக்கும் நிலுவையிலுள்ளதால், கோகுலால் இன்னும் 14 வருடங்களுக்கு முன்பாக வெளியுலகத்தை பார்க்க முடியாது. அவரது 3 வயது மகள் அதற்குள் 17 வயது மகளாக வளர்ந்து நிற்பாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications