காஷ்மீர் சென்று திரும்பிய அனைத்துக் கட்சி குழு- மோடியிடம் ராஜ்நாத் விவரிக்கிறார்
டெல்லி: அனைத்துக் கட்சிக் குழுவிற்கு தலைமையேற்று 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றிருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விரிவாக பேசவுள்ளார்.
காஷ்மீரில் ஜுலை 8ம் தேதி புர்கன் வானி கொல்லப்பட்டதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. வன்முறை போராட்டங்களில் இதுவரை சுமார் 69 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தி அங்கு அமைதியை ஏற்படுத்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 தலைவர்கள் அடங்கிய அனைத்துக் கட்சி குழு காஷ்மீர் சென்றது.

அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அம்மாநில முதலமைச்சர் மெக்பூபா பிரிவினைவாத அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் அதனை ஏற்க மறுத்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, முதலமைச்சர் மெக்பூபா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்ட அனைத்து கட்சிக் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் காஷ்மீரிலும், ஜம்முவிலும் நடந்து முடிந்து டெல்லி திரும்பியுள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
அதே போன்று வியட்நாம், சீனாவின் 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ள பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங் சந்தித்து காஷ்மீர் நிலைமை குறித்தும், அங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டம் குறித்து விரிவாக பேச உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications