5 கருணை மனுக்களை நிராகரித்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் தாக்கல் செய்திருந்த கருணை மனுக்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நிராகரித்தார்.
டெல்லி அருகே உள்ள நித்தாரி கிராமத்தில் 2006ஆம் ஆண்டு 6 குழந்தைகள் உட்பட 16 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சுரேந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் அவரது தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக கருணை மனு அளித்திருந்தார். இதேபோல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 4 பேரும் மத்திய அரசிடம் கருணை மனு கொடுத்திருந்தனர்.
இந்த 5 கருணை மனுக்களும் இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications